மோடி மீதான திருடர் விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.. சுப்ரீம் கோர்ட் வார்னிங்
பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த விமர்சனத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த கருத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரபேல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று ரபேல் தொடர்பான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு முடிவிற்கு வந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ரபேல் வழக்கு
ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மோடி ரபேல் ஒப்பந்தம் மூலம் திருடிவிட்டார். அம்பானிக்கு இவர் 30000 கோடி ரூபாயை அளித்து திருடுவதற்கு உதவி இருக்கிறார் என்று குறிப்பிட்டார். மோடியை உச்ச நீதிமன்றமே திருடர் என்று கூறிவிட்டது, என்று குறிப்பிட்டார்.

திருடர் எப்படி
இதற்காக ராகுல் காந்தி, காவலாளியே திருடர் என்று பொருள்படும் வகையில் சவுக்கித்தார் சோர் ஹே என்று குறிப்பிட்டார். லோக்சபா தேர்தலில் இந்த வாசகம் பெரிய வைரலானது. இந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பிரதமரை ராகுல் தரைகுறைவாக பேசுகிறார் என்று பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி மூலம் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது .

விளக்கம்
இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதமே நோட்டீஸ் அனுப்பியது. மோடியை பற்றி தவறாக பேசியது ஏன் என்று நீதிமன்றம் விளக்கம் கேட்டது.

மன்னிப்பு கேட்டார்
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் ஆன ராகுல் காந்தி தன்னுடைய கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பின் மீண்டும் ராகுல் காந்தி மன்னிப்பு கோரினார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எம் ஜோசப், சஞ்சன் கிசான் கவுல் ஆகியோர் அமர்வு இதை விசாரித்தது. ரபேல் மறுசீராய்வு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

வழக்கு முடிந்தது
அதன்படி பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த கருத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
ராகுல் காந்தியின் மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனாலும், ராகுல் காந்தி எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும், பெரிய கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications