Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொறுப்பு டிஜிபி நியமனம்.. தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றார். சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில் புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

DGP Supreme Court

அவமதிப்பு வழக்கு

டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், டிஜிபிக்கு பிறகு பொறுப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்ற வழிகாட்டுதல்களை விதித்து இருந்தது என்றும், இந்த வழக்கினை உதாரணமாக கொண்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தன. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறுகையில், "பொறுப்பு டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் தமிழக அரசு புறக்கணித்துள்ளது எனவும், காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அண்ணாமலை விமர்சனம்

உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன், பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு.மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது.

சங்கர் ஜிவாலை காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு" என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து இருந்தார்.

விஜய்யின் தவெக விமர்சனம்

அதேபோல தவெக நிர்வாகி அருண்ராஜ்ஜும் டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசு விதிகளை மீறியிருப்பதாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில்தான், தமிழக அரசுக்கு எதிராக ஹென்றி திபென் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் போது நீதிமன்றம் என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்ற பரபரப்பும் தற்போதே ஏற்பட்டுள்ளது.

யார் இந்த வெங்கடராமன்?

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு தீ அணைப்பு ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜிபி வெங்கடராமன் 1994-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக, தமிழக காவல்துறையில் அவர் பணியில் சேர்ந்தார். முதன்முதலாக உதவி போலீஸ் சூப்பிரண்டாக திருச்செந்தூரில் தனது பணியை அவர் தொடங்கினார்.

சி.பி.ஐ.-லும் இவர் பணியாற்றியுள்ளார். சி.பி.சி.ஐ.டி., லஞ்ச ஒழிப்புத்துறையிலும் அவர் பணியாற்றி இருக்கிறார். டிஜிபி வெங்கடராமன், நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவர் பொருளாதாரத்தில் பி.ஏ.வும், நிர்வாகத்தில் எம்.ஏ. பட்டப்படிப்பும் படித்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிக்கிறார். இளைய மகன் சென்னையில் பள்ளிப்படிப்பை படித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+