டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவி உடை திருவள்ளுவர் படம்.. வெங்கையா நாயுடு ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    காவி உடை திருவள்ளுவர் படம்.. ட்விட்டை மாற்றிய வெங்கையா நாயுடு

    டெல்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து காவி உடை திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.

    திருவள்ளுவரின் வழக்கமான தோற்றத்தை மாற்றி காவி உடை தரித்தவராக தமிழக பாஜக தமது சமூக வலைதளப் பக்கங்களில் அண்மையில் வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

    ஆனாலும் பாஜகவினர் காவி உடை திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    ஸ்டாலின் கண்டனம் எதிரொலி: செஞ்சி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுஸ்டாலின் கண்டனம் எதிரொலி: செஞ்சி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் தந்தை பெரியார் விருது

    காவி உடை திருவள்ளுவர்

    காவி உடை திருவள்ளுவர்

    அதில், காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பகிர்ந்திருந்தார். இதை தமிழக பாஜக ஷேர் செய்திருந்தது. இதற்கு தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    வீரமணி கண்டனம்

    வீரமணி கண்டனம்

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, உயர் பதவியில் இருந்தாலும் தாம் யார் என்பதை வெங்கையா நாயுடு வெளிப்படுத்தி உள்ளார்; காவிக்கு பின்னால் மத்திய பாஜக அரசு உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

     இந்தியாவை இந்து நாடாக்குவதா?

    இந்தியாவை இந்து நாடாக்குவதா?

    மேலும் பாஜக, இந்து அமைப்புகள் போல துணை ஜனாதிபதியே காவி உடை திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது; இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சியா இது என்றும் வீரமணி கேள்வி எழுப்பினார்.

    காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்

    இதனையடுத்து காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு நீக்கி வழக்கமான வெள்ளை உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார் வெங்கையா நாயுடு.

    தமிழக பாஜக ட்வீட்

    இதனையடுத்து தமிழக பாஜகவினரும் வெங்கையா நாயுடுவின் ட்வீட்டை ஷேர் செய்ததை நீக்கி உள்ளது. இருப்பினும் பாஜக காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை மற்றொரு ட்வீட்டில் பதிவிட்டுள்ளது.

     பாஜகவின் திருவள்ளுவர் தின வாழ்த்து

    பாஜகவின் திருவள்ளுவர் தின வாழ்த்து

    அதில், தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா மப்பா லொருபாவை யாப்பவோ வள்ளுவனார் முப்பால் மொழிமூழ்கு வார். தாமரை குளத்தில் ஒருவர் குளித்தால், வேறு குளத்தை நாட மாட்டார் என்பது போல திருக்குறளைப் படிப்பவர் வேறு நூலை நாட மாட்டார். #ThiruvalluvaMaalai என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    A Controversy has erupted over the Vice president Venkaiah Naidu's tweet with Saffron Thiruvalluvar image.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X