கொத்து கொத்தாக மனிதர்களை காவு வாங்கும் கொரோனா... உதவ முன்வந்த ஐ..நா- இந்தியா நிராகரிப்பால் சர்ச்சை
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு கொத்து கொத்தாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படும் சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டிய ஐ.நா.வின் யோசனையை மத்திய பாஜக அரசு நிராகரித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு கொண்டிருக்கின்றனர்.

உதவ முன்வரும் உலகம்
கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள் பல மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பின்னர் குவியல் குவியலாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தியா எதிர்கொண்டிருக்கும் இப்பேரவலம் உலக நாடுகளை உலுக்கியிருக்கிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.

ஐ.நா. உதவிக் கரம்
இதேபோல் இந்தியாவுக்கு தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. ஆனால் தங்களது உதவியை இந்தியா நிராகரித்துவிட்டதாக ஐ.நா. வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா நிராகரிப்பு
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹெக் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபை உதவ முன்வந்தது. இருப்பினும் எங்களிடம் எல்லா உபகரணங்களும் போதுமான அளவு இருக்கிறது என கூறிவிட்டது இந்தியா. ஆகையால் இந்தியாவுக்கான ஐ.நா. உதவி இப்போது தேவைப்படாமல் போய்விட்டது என்றார்.

பாஜக அரசு மீது விமர்சனம்
அதேநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் பற்றாக்குறை என ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவில் திணறிக் கொண்டிருக்கிறது. இப்படியான அவலமான நிலையில் ஐ.நா.வின் உதவியை இந்தியா நிராகரித்திருப்பது கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications