ஜனவரியிலேயே ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. இந்தியாவில் 27 ஆயிரத்தை கடந்த பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் ஜனவரி மாத தொடக்கத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Recommended Video
2020ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரொனா தொற்று பாதிப்பு தற்போது வரை அடுத்தடுத்த ஆண்டில் இரண்டு அலைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பிப்ரவரி மாதம் கொரோனா 3வது அலை உச்சமடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டது. இந்தியாவில் இன்று கொரொனா பாதிப்பு கடந்த ஆண்டை விட முன்னதாகவே அதிகரித்துள்ளது சுகதாரத்துறை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் டிசம்பர் கடைசி வாரத்தில் இந்தியாவில் பாதிப்பு பத்தாயிரத்துக்குள் தான் இருந்தது. 29 ஆம் தேதி அன்று சுமார் 9 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை திடீரென 13 ஆயிரத்து 154 உயர்ந்தது.நாட்டில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை திடீரென 13,154 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் கோரோனா பாதித்தவர்களின் எணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக பதிவாகி இருந்தது.

பாதிப்பு எவ்வளவு?
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் தொற்று இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 3,48,89, 132ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதன்படி 1,22,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 1,04,781 ஆகவும், நேற்று முன்தினம் 91,361 ஆகவும் இருந்தது. இன்று9,249 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை
இதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 284 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 406 பேர், நேற்று முன்தினம் 220 பேர் உயிரிழந்து உள்ளனர். இஇந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தோர் எண்ணிக்கை 4,81,486 லிருந்து 4,81,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், நேற்று முன்தினம் 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. நேற்று 22 ஆயிரம் கடந்து இருந்தது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இன்று 27 ஆயிரத்தை கடந்து உள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 1,525 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 560 பேர் குணமடைந்த நிலையில் 965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மஹராஷ்டிர மாநிலத்தில் 460 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும் குஜராத் மாநிலத்தில் 136 பேருக்கும், கேரளாவில் 109 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 69 பேருக்கும், தெலுங்கானாவில் 67 பேருக்கும், கர்நாடகாவில் 64 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனமத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications