3 கொரோனா வேக்சின்கள்.. மனித சோதனையில் 1750 பேர்.. ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை.. இந்தியா துரிதம்
டெல்லி: இந்தியாவில் மொத்தம் மூன்று கொரோனா வேக்சின்கள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனும் இன்னொருபக்கம் வேக்சின் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உலகம் முழுக்க கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி தீவிரம் எடுத்துள்ளது. அதிலும் ரஷ்யா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மூன்று நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் என்று 100க்கும் அதிகமான கொரோனா வேக்சின் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்தியாவிலும் இரண்டு கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சைடஸ் கேடில்லா நிறுவனங்கள் மூலம் இரண்டு வேக்சின்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மொத்தம் மூன்று
இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் மூன்று கொரோனா வேக்சின்கள் மீது மனித சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனும் இன்னொருபக்கம் வேக்சின் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் மொத்தம் மூன்று வேக்சின் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்
நாம் இப்போது வேக்சின் சோதனையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். பொதுவாக வேக்சின் என்பது மூன்று கட்டமாக மனித சோதனை செய்யப்படும். அடிப்படை சோதனை எனப்படும் முதல் கட்டம் இதில் குறைந்த எண்ணிக்கையில் சிலரிடம் வேக்சின் சோதனை செய்யப்படும். அடுத்து கிளினிக்கள் சோதனை என்னும் இரண்டாம் கட்டம், இதில் பலருக்கு வேக்சின் கொடுத்து சோதனை செய்யப்படும். மூன்றாவது கட்டத்தில் ஆயிரக்கணக்காக மக்களுக்கு வேக்சின் கொடுத்து சோதனை செய்யப்படும்.

முக்கிய மனித சோதனை
அந்த வகையில் இந்தியாவில் தற்போது மூன்று வேக்சின்கள் பல்வேறு கட்டத்தில் மனித சோதனையில் இருக்கிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. 1700 பேர் மீது இந்த கோவிட்ஷீல்ட் மருந்து இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்து இரண்டாம் கட்ட மனித சோதனையில் உள்ளது.

சைடஸ் கேடில்லா
சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் சைகோவ் - டி (ZyCoV-D) மருந்து இரண்டாம் கட்ட மனித சோதனையை முடித்துள்ளது. இதனால் மொத்தமாக 1750 பேருக்கும் அதிகமாக இந்தியாவில் கொரோனா வேக்சின் சோதனையில் இருக்கிறார்கள். இந்தியாவின் கோவாக்சின் மற்றும் சைகோவ் - டி ஆகிய இரண்டு வேக்சின்களும் அடுத்த கட்ட சோதனைக்கு செல்ல இருக்கிறது.

ரஷ்யா பேச்சுவார்த்தை
இதனால் கொரோனா வேக்சின் சோதனையில் நாம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம் என்று கூற முடியும். அதேபோல் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ மருந்தை இந்தியாவில் சோதனை செய்ய ஆலோசனை செய்து வருகிறோம் . இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். ரஷ்யா சில டேட்டாக்களை எங்களிடம் பகிர்ந்து உள்ளது. அதை ஆராய்ந்து வருகிறோம் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications