டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை... 236 மாவட்டங்களில் நடைபெறுகிறது!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 236 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.

ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகள் போட முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்தும் ஒத்திகை செய்து பார்க்கப்படும்.

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

நாடு முழுவதும் ஒத்திகை

நாடு முழுவதும் ஒத்திகை

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சிறையிலும் சசிகலாவுக்கு விஐபி அந்தஸ்து, ஷாப்பிங் போவது என பல மோசடிகள் அம்பலமாகின. இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்தபடியே கன்னட மொழியை கற்றுக் கொண்டார். பல கைத்தொழில்களையும் கற்று தேர்ந்துள்ளார்.

 100 தடுப்பூசிகள் சாத்தியமா?

100 தடுப்பூசிகள் சாத்தியமா?

ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகள் போட முடியுமா என ஒத்திகை செய்து பார்க்கப்படும். தடுப்பூசி போடும் அறை, காத்திருப்போர் அறை போன்றவை குறித்தும் ஒத்திகை பார்க்கப்படும். தடுப்பூசி போடும் கண்காணிப்பு அறையின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஒத்திகை செய்து பார்க்கப்பட உள்ளது.

நேரில் ஆய்வு

நேரில் ஆய்வு

தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நடைபெறும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச வர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

 முதலில் தடுப்பூசி

முதலில் தடுப்பூசி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 20% பேருக்கு அதாவது 1.3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களுடன் 50 வயதுக்கு குறைந்தோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

English summary
Corona vaccine rehearsals are set to take place today in 236 districts in various states across the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X