• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மொத்தம் 3 கேள்விகள்.. "சிரிக்க எப்படி மனசு வருது.. அதிகார பசி".. சாட்டையை சுழட்டிய பிரியங்கா!

Google Oneindia Tamil News

டெல்லி: 'இன்னைக்கு நாட்டு மக்கள், தடுப்பூசிக்காகவும், மருந்துக்காகவும், ஆக்சிஜனுக்காகவும் கண்ணீர் வடிக்கிறார்கள்.. ஆனால், மத்திய அரசோ மக்கள் படும் கஷ்டத்தை பார்த்துகூட, உணர்வற்று கிடக்கிறது.. அதிகார ஆசை பிடித்து, தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது... அங்கு நடக்கும் பேரணிகளில் இதை பற்றி பேசி சிலர் சிரிக்கிறார்கள்... எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்தால் தட்டுப்பாடு வராதா?" என்ற காட்டமான கேள்விக்கணைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசை நோக்கி வீசியுள்ளார் பிரியங்கா காந்தி..!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. இந்த அலை முதல் அலையைவிட மிகவும் ஆபத்தானது, வீர்யமிக்கது என்கிறார்கள்..

இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேலான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்... இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறைகள் எழுந்துள்ளன..

கொரோனாவைரஸ்: இந்தியாவில் 24மணி நேரத்தில் 76826 பேருக்கு தொற்று.. 1081 பேர் பலி கொரோனாவைரஸ்: இந்தியாவில் 24மணி நேரத்தில் 76826 பேருக்கு தொற்று.. 1081 பேர் பலி

 பிரியங்கா

பிரியங்கா

ஆனாலும், மத்திய அரசோ, அப்படியெல்லாம் ஒன்றும் தட்டுப்பாடு எதுவுமில்லை, எல்லாம் கூடிய சீக்கிரம் சரிசெய்யப்படும் என்றும் சொல்லி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் அவர் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளதாவது:

 கண்ணியமானவர்

கண்ணியமானவர்

"மன்மோகன் சிங் ஜி 10 வருஷமாக பிரதமராக இருந்தவர்.. அவர் எவ்வளவு கண்ணியமானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவர் பரிந்துரைகளை வழங்குகிறார் என்றால், அதை பரிசீலிக்க வேண்டும்.. நாடு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போது அவர் வழங்கும் பரிந்துரைகளை அதே கண்ணியத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி

தடுப்பூசி

இன்றைய தினம், நம் மக்கள் தடுப்பூசிக்காகவும், மருந்துக்காகவும், ஆக்ஸினுக்காகவும், பெட் வசதிக்காகவும் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.. ஆனால், மத்திய அரசோ எதை பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை.. மக்களின் கஷ்டம், அவதி குறித்து, உணர்வற்று கிடக்கிறது.. அதிகார ஆசையுடன், தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.. அது தொடர்பாக நடக்கும் பேரணிகளில் இதை பற்றி பேசி சிலர் சிரிக்கிறார்கள்... இதெல்லாம் எப்படி உங்களால் முடிகிறது? மக்கள் நலனைவிட, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 போக்குவரத்து வசதி

போக்குவரத்து வசதி

இன்று நாட்டின் பல ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. இதற்கு முக்கிய காரணம், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்வதில் போதுமான போக்குவரத்து வசதியில்லை... 2வது அலை வரப்போகிறது, நம்மை தாக்க போகிறது என்று ஏற்கனவே தெரிந்தும்கூட, இந்த போக்குவரத்து வசதியை மத்திய அரசு ஏன் முன்னாடியே செய்யவில்லை? பரவி வரும் 2-வது அலையை சமாளிக்க மத்திய அரசு சரியான திட்டமிடலை வகுக்கவில்லை.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஆனால், உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிகப்பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நாடு என்று சொல்லி பிரதமர் மோடி நடிக்கிறார்... அப்படியென்றால், நமக்கு ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம்? இந்த 2 வது அலை குறித்து, மத்திய அரசு செரோ சர்வே ஒன்றை நடத்தியதே.. அந்த ஆய்வில், 2-வது அலை தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்தும் ஏன் கவனிக்கவில்லை? என் புறக்கணித்தீர்கள்? இன்னைக்கு 2 ஆயிரம் டிரக்குகளில் மட்டுமே ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது... இத்தனைக்கும் நமக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. ஆனாலும், அதைக் கொண்டுசெல்ல முடியவில்லை என்பது எப்படிப்பட்ட வேதனை?

 ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

இந்த 6 மாதத்தில், 11 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது.. குறிப்பாக, ஜனவரி, மார்ச் மாதத்தில் மட்டும் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது... இப்படியெல்லாம் செய்தால், நமக்கு பற்றாக்குறை வராதா? இந்த தடுப்பூசிகளை வைத்து, நம் 4 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போட்டிருக்கலாமே? ஏன் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை?

 மோசமான திட்டமிடல்

மோசமான திட்டமிடல்

மோசமான திட்டமிடல்தான் இன்றைய தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம்.. சரியான நிர்வாக திறமையின்மைதான், ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு காரணம்.. இது ஒட்டுமொத்த மத்திய அரசின் தோல்விதான் என்றே சொல்ல வேண்டும்.. அதேபோலதான், நாடு முழுவதும் டெஸ்ட்களை தீவிரப்படுத்தவில்லை? எதற்காக தீவிரப்படுத்தவில்லை? எதற்காக ஆன்டிஜென் டெஸ்ட் நடத்தவில்லை? எதற்காக அந்த டெஸ்ட்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டது?

தடுப்பூசி

தடுப்பூசி

இதுபோன்ற டெஸ்ட்களை தனியார் ஆய்வுக்கூடங்களில் நடத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. அப்படின்னா, மக்களின் உயிர் முக்கியமா? அல்லது பெருகி வரும் கொரோனா பாதிப்பினால், உங்கள் அரசு குறித்து நீங்கள் கட்டமைத்துள்ள தோற்றம், மரியாதையை தகர்த்துவிடும் என்று பயப்படுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். தடுப்பூசி, ஆக்ஸிஜன், மருந்துகள் என்ற 3 பிரதான விஷயங்களை முன்வைத்து பிரியங்கா கேட்டுள்ள கேள்வி, பாஜக அரசை நெளிய வைத்து வருகிறது..!

English summary
Corona vaccine shortage is a failure of the central Gov, Accusation Priyanka Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X