டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2வது வேவ் வந்துருச்சா.. சீனாவை முந்தி கொண்டு ஷாக் தந்த இந்தியா.. அதிரடி வேகத்தில் கொரோனா பாதிப்பு?

தொற்று பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா என்ற தகவல் வெளியாகிவிட்டது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவையே மிஞ்சிவிட்டது இந்தியா.. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,970 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... 103 பேர் உயிரிழந்துள்ளனர்... இப்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 85,940 ஆக அதிகரித்து மிரட்டி வருகிறது.. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகமே வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் 2வது அலை உருவாகி விட்டதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி மக்களைக் கவலைக்குள்ளாக்கி வருகிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென அதிக அளவில் பாதிப்புகள் வருவதற்கு 2வது அலையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

3 லாக் டவுன் போட்டாகி விட்டது.. 4வது லாக்டவுனுக்கு ஆலோசனை நடந்து வருகிறது.. எப்படியும் அதை தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் வேகமாக குணமடையும் கொரோனா நோயாளிகள்.. எப்படி சாத்தியம்?ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்.. தமிழகத்தில் வேகமாக குணமடையும் கொரோனா நோயாளிகள்.. எப்படி சாத்தியம்?

ஊரடங்கு

ஊரடங்கு

இந்த சமயத்தில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது... நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதற்கு காரணம், டெஸ்ட்களை நாம் அதிகரித்துள்ளதுதான்.

ஹுகான்

ஹுகான்

இந்நிலையில் ஒரு தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.. சீனாவையே நாம் தொற்று எண்ணிக்கையில் மிஞ்சி விட்டோம் என்ற தகவல்தான் அது... சீனாவின் ஹூகானில் ஒரு மீன் மார்க்கெட்டில் ஆரம்பித்த இந்த கொரோனா இப்போது நம்ம ஊர் சிந்தாதிரிப்பேட்டை வரை வந்து கொஞ்சம்கூட அச்சம் விலகாமல் வைத்து வருகிறது.. இப்போது சீனாவை காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

 24 மணி நேரம்

24 மணி நேரம்

உலகளவில் பார்த்தால் தொற்று பாதிப்பில் நாம் 11வது இடத்தில்தான் இருக்கிறோம்... ஆனால் மொத்த பாதிப்பை பார்த்தால் பீதி எழுகிறது.. மத்திய சுகாதார துறை அமைச்சகம் இதை பற்றி சொல்லும்போது, "24 மணி நேரத்தில் மட்டும் மட்டும் 3,970 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 85,940 ஆக உயர்ந்துள்ளது.

இறப்பு விகிதம்

இறப்பு விகிதம்

இந்த வைரஸினால் குணமடையும் விகிதமானது 35.08 சதவீதமாக அதிகரித்துள்ளது... அந்த வகையில், 30,000 பேர் உடல்நலம் தேறிவிட்டனர்.. சீனாவில் உயிரிழப்பு விகிதம் 5.5 சதவீதமாக உள்ளது. அதனுடன் நாம் ஒப்பிடும் போது உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 68 சதவீத பாதிப்பானது 18 நகரங்களில் உள்ளது.. குறிப்பாக மும்பை, டெல்லி, அகமதாபாத், புனே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 50 சதவீத பாதிப்பு உள்ளது.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இதில் டாப்பில் முதலிடத்தில் உள்ளது மகாராஷ்டிரா... அங்கு 1,000 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரத்திலும் மும்பையில்தான் நிறைய பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி விட்டதாம்.. இதையெல்லாம் பார்த்தால் 4வது லாக்டவுன் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது.

 இரட்டை இலக்கு

இரட்டை இலக்கு

தற்போது கேரளாவில் மீண்டும் இரட்டைஇலக்க எண்ணிக்கையில் பாதிப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இது கேரளாவை கவலைக்குள்ளாகியுள்ளது. இது 2வது அலையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதேபோல நீண்ட நாட்களாக பாதிப்பே இல்லாமல் இருந்த கோவா, இமாச்சலப் பிரசேதத்திலும் கூட புதிய தொற்று ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் கேரளாவில் நாளை முழு ஊரடங்கை மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கவுள்ளனர்.

English summary
coronavirus: india crossed coronavirus cases than china
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X