இந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலத்தில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் படுதீவிரமாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழப்பும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

கேரளாவில் அதிகம்
கேரளாவில்தான் மிக அதிகபட்சமாக 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கேரளாவில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 9 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவில் 88 பேர் பாதிப்பு
கர்நாடகாவில் 88 பேர் பாதிக்கப்பட்டும் 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தம் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தெலுங்கானாவில் 70 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

குஜராத்தில் இதுவரை 6 பேர் பலி
கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இம்மாநிலத்தில் 6 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா. மொத்தம் 69 பேர் இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து ராஜஸ்தானில் 69 பேரும் தமிழ்நாட்டில் 67 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பலியாகி இருக்கிறார்.

பிற மாநிலங்களில்...
மத்திய பிரதேசத்தில் 2 பேரும் பஞ்சாப், காஷ்மீரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 47 பேரும் பஞ்சாப்பில் 39 பேரும் காஷ்மீரில் 45 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 2 பேரும் பீகாரில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதேபோல் இமாச்சல பிரதேசத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications