Coronavirus update in India...ஆன்டிஜென் டெஸ்ட்... அதிகரிப்பு... போதியதாக இருக்கிறதா?
டெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகளவில் கொரோனாவுக்கான மனித பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இந்தியாவில் 3 கோடி பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆன்டிஜென் (மூக்கு, தொண்டையில் ஸ்வேப் எடுப்பது) பரிசோதனைகள்தான் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கொரோனா தொற்று பரவத் துவங்கிய ஆரம்ப கால கட்டடத்தில் இந்தியாவில் போதிய பரிசோதனைகள் செய்வதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்குக் காரணம் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததுதான் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மே மாதத்தில் 215 நாடுகளில் இருந்து வெறும் 52 நாடுகளில் இருந்து மட்டுமே பரிசோதனை ஆய்வுகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரிய வந்தன.

கடந்த இரண்டு வாரம்
ஆனால், திடீரென இந்தியாவில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை கொரோனா பரிசோதனை 3 கோடியை எட்டியுள்ளது என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது. இதில் முதல் ஒரு கோடி பேருக்கு 164 நாட்களிலும், அடுத்த இரண்டு பேருக்கு 27 நாட்களிலும், இறுதிக்கட்டமாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மே மாதம் வரை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்ற அளவில்தான் பரிசோதனை நடந்து வந்தது.

இந்திய மக்கள் தொகை
இந்த பரிசோதனை போதிய அளவில் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது, இதுபோதுமானதாக இல்லை. இந்தியாவில் பத்து லட்சம் பேரில் 21,742 பேருக்கு மட்டுமே தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மூக்கில் ஸ்வேப்
ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை இந்தியாவில் மேற்கொள்வது மிகவும் மலிவானது என்பதால் அந்த பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வலியுறுத்தி வருகிறது. இந்த பரிசோதனையில் மூக்கில் அல்லது தொண்டையில் இருந்து ஸ்வேப் முறையில் வைரஸ் இருக்கிறதா என்று பார்க்கப்படும். 30 நிமிடத்தில் இந்த பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொல்லலாம்.

மெக்சிகோவில் அதிகம்
இந்தியாவில் குறைவான பரிசோதனை காரணமாக தொற்று பாதிப்பு இருக்கும் சதவீதமும் மற்ற நாடுகளைவிட குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பத்து லட்சம் பேரில் 2,14,224 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 7.8 சதவீதம் பேருக்கு கொரோனா பதிப்பு இருப்பது தெரிய வருகிறது. பிரேசில் நாட்டில் பத்து லட்சம் பேரில் 63,287 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 24.8 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வெறும் 21,743 பேருக்குத்தான் செய்யப்படுகிறது. இதனால் தொற்று இருக்கும் விகிதமும் 8.3 சதவீதமாக இருக்கிறது. ரஷ்யாவில் 2,24,061 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2.8 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மெக்சிகோவில்தான் 9,116 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அதிகபட்சமாக 44.3 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. ஆதலால், பரிசோதனை மட்டும் ஒரு நாட்டின் கொரோனா தொற்று சதவீதத்தை துல்லியமாக காட்டும் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications