டிகேஎஸ் கொடுத்த ஐடியா.. துரிதமாக முடிவு எடுத்த சோனியா காந்தி.. பாராட்டும் நெட்டிசன்கள்!
டெல்லி: பிற மாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளிகளின் செலவை நாங்களே ஏற்கிறோம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்து இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் கொடுத்த ஐடியா இது என்று கூறுகிறார்கள்.
கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பிற மாநில தொழிலாளர்கள் உணவு இன்றி மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் ஏற்பாடு
இதற்காக பல மாநிலங்களில் நேற்று சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். ஏற்கனவே இந்தியா முழுக்க 6க்கும் அதிகமான ரயில்களில் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்களின் இந்த பயணத்திற்கான ரயில் கட்டண செலவு தொழிலாளர்களிடம் இருந்தே வசூலிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்
1947ல் இந்திய பிரிவினைக்கு பின் இந்தியாவிற்கு உள்ளேயே மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக இப்போதுதான் இடம்பெயர்கிறார்கள். பெரிய மனித குல சோகத்தை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். அரசின் அவசர அவசரமான லாக் டவுன் அறிவிப்பால் பிற மாநில தொழிலாளர்கள் உணவு இன்றி, காசு இன்றி தண்ணீர் கூட இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. போதிய அவகாசம் அளிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை
இவர்களை அரசு இலவசமாக ரயிலில் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களின் கோரிக்கையை அரசு கேட்கவில்லை.இதனால் இந்த ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும். எல்லா மாநில காங்கிரஸ் கமிட்டியும் இவர்களின் பயண செலவை ஏற்றுக்கொள்ளும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம். இவர்களுக்காக நாம்தான் ஒற்றுமையாக கரம் கொடுக்க வேண்டும்.

கடும் விமர்சனம்
இப்போதும் கூட நாடு முழுக்க பல லட்சம் பேர் சொந்த வீடு திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் பணம் இல்லை. அதே சமயம் அவர்கள் தங்கவும் வெளி மாநிலத்தில் இடம் இல்லை. இப்படி ஒரு மோசமான சூழ்நிலை இருக்கும் போது அவர்களிடம் அரசு பணம் வாங்குகிறது. நமது அரசின் வேலை என்ன? ரயில்வே துறையின் இந்த முடிவு மிக மிக கண்டிக்கத்தக்கது.

சுதந்திரத்துக்கு பின்
1947ல் இந்திய பிரிவினைக்கு பின் இந்தியாவிற்கு உள்ளேயே மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக இப்போதுதான் இடம்பெயர்கிறார்கள். பெரிய மனித குல சோகத்தை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். அரசின் அவசர அவசரமான லாக் டவுன் அறிவிப்பால் பிற மாநில தொழிலாளர்கள் உணவு இன்றி, காசு இன்று தண்ணீர் கூட இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. போதிய அவகாசம் அளிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை
இவர்களை அரசு இலவசமாக ரயிலில் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களின் கோரிக்கையை அரசு கேட்கவில்லை.இதனால் இந்த ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும். எல்லா மாநில காங்கிரஸ் கமிட்டியும் இவர்களின் பயன் செலவை ஏற்றுக்கொள்ளும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம். இவர்களுக்காக நாம்தான் ஒற்றுமையாக கரம் கொடுக்க வேண்டும்.

கடும் விமர்சனம்
இப்போதும் கூட நாடு முழுக்க பல லட்சம் பேர் சொந்த வீடு திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் பணம் இல்லை. அதே சமயம் அவர்கள் தங்கவும் வெளி மாநிலத்தில் இடம் இல்லை. இப்படி ஒரு மோசமான சூழ்நிலை இருக்கும் போது அவர்களிடம் அரசு பணம் வாங்குகிறது. நமது அரசின் வேலை என்ன? ரயில்வே துறையின் இந்த முடிவு மிக மிக கண்டிக்கத்தக்கது.

விமானம் செலவு
வெளிநாட்டில் இருக்கும் நபர்களை இலவசமாக விமானத்தில் கொண்டு வந்த அரசுக்கு மாநிலங்களுக்கு இடையே உள்ளே செய்யும் மக்களுக்கு உதவ முடியவில்லை. குஜராத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக மத்திய அரசு 100 கோடி செலவு செய்தது. ஆனால் தங்களின் சொந்த நாட்டு மக்களுக்காக அரசு செலவு செய்ய மாறுகிறது. 151 கோடி ரூபாயை ரயில்வேத்துறை கொரோனா நிதிக்கு அளிக்கும் போது மக்களுக்கு இலவச பயணத்தை அளிக்க முடியாதா? என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

என்ன ஐடியா
இது கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் கொடுத்த ஐடியா என்கிறார்கள். கர்நாடக அரசின் கீழ் இயங்கும் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு அம்மாநில காங்கிரஸ் சார்பாக டி கே சிவக்குமார் உதவி செய்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி 1 கோடி ரூபாய் நிதி உதவியை கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு அளித்துள்ளது. இது அங்கு பெரிய வரவேற்பை பெற்றது. பிற மாவட்ட தொழிலாளர்களின் பேருந்து செலவை ஏற்கும் வகையில் அவர் இந்த உதவியை செய்தார்.

டிகேஎஸ் சொன்னார்
இது அங்கு பெரிய ஹிட் அடித்தது. இதனால் டிகேஎஸ் ஐடியாவை அப்படியே சோனியா காந்தி நாடு முழுக்க அறிவித்து இருக்கிறார். இதனால் டிவிட்டரில் நீண்ட நாளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். பிற மாநில தொழிலாளிகளுக்கு இது பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications