டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இத்துடன் முடியாது.. 3ஆம் அலையும் ஏற்படும்.. அது இதைவிட உக்கிரமாக இருக்கும்.. ஆராய்ச்சியாளர் பகீர்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரசின் மூன்றாவது அலையும் ஏற்படும் என்று கூறியுள்ள டாக்டர் சேகர் மண்டே, அது இரண்டாம் அலையைவிடத் தீவிரமாக இருக்கும் என்றும் வைரசின் மரபணு மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார்

இந்தாண்டு தொடக்கத்தில் உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா தாக்கம் அப்போது குறைவாகவே இருந்தது. நாட்டிலிருந்து இனி கொரோனா மறைந்துவிடும் என்றே பலரும் அப்போது கருதினர்.

இந்தச் சூழ்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இது 2020இல் ஏற்பட்ட கொரோனா பாதிப்பைப் போல இல்லாமல், அதைவிட மிக மோசமாக உள்ளது. இந்த கொடிய கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது.

கொரோனா பரவலின் தீவிர தன்மை குறித்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சேகர் மண்டே, பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

புதுவையில் கொரோனா அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமலாகும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையில் கொரோனா அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமலாகும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டவுன் உதவுமா?

கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டவுன் உதவுமா?

இதில் நல்ல விஷயங்களும் உள்ளன, தீய விஷயங்களும் உள்ளன. கடந்த ஆண்டு நாம் பார்த்ததைப் போல ஊரடங்கு என்பது மக்களைத் தனிமைப்படுத்துவதாகும். ஆனால் அது பொருளாதாரத்தில் மிகவும் மோசமான பாதிப்பைக் கொண்டிருந்தது. எனவே, சமூகத்திற்கு எது முக்கியம் என்பதை உணர்ந்து முடிவு எடுக்க வேண்டும். தற்போது அனைத்து நாடுகளும் வைரஸை எதிர்த்துப் போராடும் அதேநேரம் பொருளாதாரத்தைக் காக்க தேவையான முயற்சிகளை எடுப்பதை நாம் பார்க்கிறோம். எனவே, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் இருக்கும். முழு நகரத்திலும் ஊரடங்கு அமல்படுத்துவதற்குப் பதிலாக அதிக கொரோனா கேஸ்கள் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கை அறிவிக்கலாம்.

 மீண்டும் ஒரு லாக்டவுனை இந்தியா பொருளாதாரம் தாங்குமா?

மீண்டும் ஒரு லாக்டவுனை இந்தியா பொருளாதாரம் தாங்குமா?

குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தினாலும், அதனால் பொருளாதார பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். மும்பை போன்ற பெருநகரத்தில் ஊரடங்கு அமல்படுத்தும்போது, நாட்டின் பொருளாதாரத்தில் அதன் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். ஒட்டுமொத்தமாக நம் நாட்டிற்கு அல்லது குறிப்பிட்ட மாநிலத்திற்கு ஊரடங்கு தேவைப்படாது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டுமே ஊரடங்கு தேவை.

ஊரடங்கு அமல்படுத்துவதன் நோக்கம் என்ன

ஊரடங்கு அமல்படுத்துவதன் நோக்கம் என்ன

கொரோனா பரவலின் சங்கிலியை முடிந்தவரை உடைக்க வேண்டும் என்பதே ஊரடங்கின் நோக்கம். ஒருவர் சுவாசிக்கும்போது அவரது மூச்சின் நீர்த்துளிகள் மூலம் கொரோனா பரவுகிறது. இந்த பரவலை நாம் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் ஊரடங்கு கட்டுப்பாட்டை நீக்கிவிடலாம். கொரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில் உடனடியாக சோதனைகளைச் செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா மட்டுமில்லை பல நோய்களும் இந்த முறையைப் பின்பற்றினால் அழிந்துவிடும். கொரோனா பரவலின் சங்கிலியை உடைப்பது மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது என ஒருங்கிணைந்த உத்தி நமக்குத் தேவை.

இரவு ஊரடங்கு பலன் தருமா?

இரவு ஊரடங்கு பலன் தருமா?

சுவாச துளிகள் மூலமே வைரஸ் பரவல் ஏற்படுகிறது. மூடிய அறைகளிலும், சரியான காற்றோட்டம் இல்லாத அறைகளிலும் அவை காற்றிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதேநேரம் ஒரு மூடிய அறையில் அதிகமானோர் இருந்தால், அவர்களில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும். திறந்த வெளியில், சுவாச நீர்த்துளிகள் வைரஸ் நீண்ட காலம் இருக்காது. அவை விரைவில் அழிந்துவிடும்.

கட்டுப்படுத்த முடியும்

கட்டுப்படுத்த முடியும்

அதாவது திறந்தவெளியை விட மூடிய, குறைந்த காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. டிசம்பர் மாதம் முதல் வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியதும் மக்கள் மீண்டும் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். பிறந்தநாள் விழாக்கள், திருமண நிகழ்வுகள் அதிகளவில் மூடிய பகுதிகளில் நடைபெற்றன. பொருளாதாரத்தில் பாதிப்பை கருத்தில் கொண்டு பகலில் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்கிறோம். அதேநேரம் இரவு நேரங்களில் பப்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்க இரவு லாக்டவுன் உதவும்.

Array

Array

இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் எப்போதும் முதல் அலைகளை விடத் தீவிரமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1919இல் ஸ்பானிஷ் காய்ச்சல் கூட பல அலைகளைக் கொண்டிருந்தது, அதில் ஒவ்வொரு புதிய அலையும் முன்பு இருந்த அலையை விட தீவிரமானதாக இருந்தது. இறுதியில் அது கடைசியில் மெல்ல காணாமல் போனது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமான ஒரு அலை ஓய்ந்தவுடன் மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிடுகிறார்கள். ஆபத்தை உணராமல் தொற்றுநோய் இல்லை என்பது போல சாதாரண நடவடிக்கைகளைத் தொடங்குகின்றனர். அடுத்த காரணம் மக்கள் ஒன்றுகூட தொடங்கிவிடுகிறார்கள். மூன்றாவது காரணம் உருமாறிய கொரோனா வகைகள். இந்த மூன்றும் இணைந்து வைரஸ் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன.

உயிரிழப்புகள் குறையக் காரணம்

உயிரிழப்புகள் குறையக் காரணம்

முதல் அலையில் 65 வயதைக் கடந்தவர்களும் ஏற்கனவே மருத்துவ பாதிப்பு உள்ளவர்களும் எளிதாக உயிரிழந்தார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.

herd immunity எப்போது ஏற்படும்

herd immunity எப்போது ஏற்படும்

herd immunityஐ பற்றி இப்போது யோசிக்கக் கூடக் கூடாது. சமூகத்தில் உள்ள 70 முதல் 80% பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், தான் herd immunity ஏற்படும். ஆனால், வைரஸ் பரவல் அதிகரிக்க அதிகரிக்க அது அதிகளவில் மாற்றமடையும். இது ஆபத்தானது எனவே, இப்போதைய சூழ்நிலையில் herd immunityஐ பற்றி சிந்திக்கக் கூடாது. இப்போதியைச் சூழ்நிலையில் அதிகளவில் மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். பொதுமக்கள் மாஸ்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

மூன்றாம் அலை

மூன்றாம் அலை

அனைத்து பெருந்தொற்றுகளுக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை என்பது இருக்கும். இந்த இரண்டாவது அலை விரைவில் முடியும் என நாம் நம்புவோம். ஆனால் இது முடியும்போது, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்கக் கூடாது. அப்போது மூன்றாம் அலை மூலம் மிக மோசமான பாதிப்பு நமக்கு ஏற்படும். ஆனால், அடுத்தடுத்த அலைகளில் உயிரிழப்புகள் குறையும்.

கொரோனா முடியும், ஆனால்

கொரோனா முடியும், ஆனால்

வைரசின் மரபணு மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. அது இயற்கையான ஒரு நிகழ்வு, அது நடந்துகொண்டே தான் இருக்கும். அதே நேரம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வைரசின் தீவிர தன்மை குறையத் தொடங்கும். அப்படியே மெல்ல இந்த பெருந்தொற்று மறைந்துவிடும். இது நடக்க சில ஆண்டுகள் வரை ஆகும்.

இவ்வாறு டாக்டர் சேகர் மண்டே கொரோனா பரவல் குறித்து செய்திகளைப் பதிவு கொண்டார்.

English summary
Dr Shekhar Mande's latest interview about Coronavirus 2nd wave and how to curb it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X