சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு கொரோனா..கவனம் மக்களே..மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த அந்த நபரின் மாதிரி, மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 66,17,56,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் 66,86,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 63,42,36,827 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனையடுத்து இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் வேகமாக பரவி மரணங்களை அதிகரித்துள்ள உருமாறிய கொரோனா BF.7 வகை பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்ததில், கொரோனா இன்னும் முடிவடையவில்லை, விழிப்புடன் இருக்கவும் என்று மாண்டவியா ட்வீட் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். சுகாதாரம், மருந்துத் துறை, பயோடெக்னாலஜி துறை, ஆயுஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ராஜீவ் பால், நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சீனாவில் பரவி வரும் ஓமிக்ரான் மாறுபாடு வகை கொரோனா பிஎப் 7 இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பிஎப் 7 கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பிஎப் 7 என்பது ஓமிக்ரான் மாறுபாடு பிஏ 5 இன் துணை வகை. இது அதிவேகத்தில் பரவக்கூடியது. ஆனால் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கண்டறிப்பட்ட இவ்வகை கொரோனா அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை என கூறப்பட்டுள்ளது.
எனவே பிற நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கொரோனாவின் நேர்மறை மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறையையும் கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இதனையடுத்து வெளிநாடுகளில் இந்தியா திரும்புபவர்களுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று சீனாவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த நிலையில், விடுமுறையை ஒட்டி வீடு திரும்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
உருமாற்றம் பெற்ற கொரோனாவா என்பதை அறிந்துகொள்வதற்காக மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்காக அவரது மாதிரிகள் லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு பதிவாகாமல் இருந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ராவிற்கு வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது. ஆக்ராவில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications