டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமிக்ரான் கொரோனா: கோவாக்சின், கோவிஷீல்ட் பயன் அளிக்குமா? ஐசிஎம்ஆர் மருத்துவர் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமிக்ரான் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் எப்படி செயலாற்றும் என்று ஐசிஎம்ஆர் தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று குழு தலைவர் டாக்டர் சமீரான் பாண்டா விளக்கம் அளித்துள்ளார்.

உலகம் பல்வேறு நாடுகளில் B.1.1.529 எனபப்டும் ஓமிக்ரான் கொரோனா பரவி வருகிறது. உலகம் முழுக்க தற்போது 110க்கும் அதிகமான நபர்களுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இது மொத்தம் 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்! தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!

அதிக ஆபத்தான டெல்டா வகை கொரோனாவிலேயே வெறும் 8 முறைதான் உருமாற்றம் ஏற்பட்டது என்பதால் ஓமிக்ரான் இன்னும் ஆபத்து கொண்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

ஓமிக்ரான் கொரோனா

ஓமிக்ரான் கொரோனா

ஓமிக்ரான் கொரோனாவை கவலை அளிக்க கூடிய வகையாக உலக சுகாதார மையம் அறிவித்து இருந்தாலும் இது எவ்வளவு ஆபத்து கொண்டது என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இது எவ்வளவு வேகமாக பரவும் என்று தெரியவில்லை. அதேபோல் எவ்வளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் உறுதி செய்யப்படவில்லை. 32 முறை உருமாற்றம் அடைந்து இருக்கிறது என்பதாலேயே இதை மோசமான வைரஸ் என்று கூறிவிட முடியாது.

வைரல் பரவல்

வைரல் பரவல்

இந்த நிலையில்தான் நேற்று பிரதமர் மோடி ஓமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இதையடுத்து ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இது வேக்சினில் இருந்து எஸ்கேப் ஆகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வேக்சின்

வேக்சின்

அதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இது மீண்டும் தாக்குமோ என்ற அச்சமும் உள்ளது. இந்த நிலையில்தான் ஓமிக்ரான் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் எப்படி செயலாற்றும் என்று ஐசிஎம்ஆர் தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று குழு தலைவர் டாக்டர் சமீரான் பாண்டா விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

டாக்டர் சமீரான் பாண்டா அளித்துள்ள விளக்கத்தில், இந்த ஓமிக்ரான் கொரோனாவின் ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக எம்ஆர்என் வேக்சின்கள் இதற்கு எதிராக சிறப்பாக செயலாற்ற முடியாது. ஏனென்றால் எம்ஆர்என்ஏ வேக்சின்கள் ஸ்பைக் புரோட்டினைதான் குறி வைக்கும். இப்போது இதிலேயே உருமாற்றம் அடைந்துள்ளதால் மாடர்னா போன்ற எம்ஆர்என்ஏ வேக்சின்கள் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயலாற்ற வாய்ப்பு குறைவு.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

எம்ஆர்என் வேக்சின்களை இதனால் லேசாக அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் எல்லா வேக்சினும் ஒரே மாதிரி கிடையாது. கோவாக்சின், கோவிஷீல்ட் எம்ஆர்ஏ வேக்சின் கிடையாது. இவை வைரல் வெக்டர் வகை வேக்சின். உடலில் இருக்கும் வெவ்வேறு ஆண்டிஜன் மூலம் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவை எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். ஓமிக்ரான் கொரோனா குறித்து முழுமையாக தெரிந்தால் மட்டுமே கோவாக்சின், கோவிஷீல்ட் வேக்சின்களின் பலம் குறித்தும் தெரிவிக்க முடியும்.

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

புதிய ஓமிக்ரான் கொரோனா குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். இப்போது வரை வெளியாகி இருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் படி இது வேகமாக பரவும் திறன் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது இந்த நொடியில் இது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறதா, கிளஸ்டர்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறதா என்று சொல்ல முடியாது. இதற்கு இன்னும் பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.

மக்கள்

மக்கள்

பல்வேறு மக்களை டெஸ்ட் செய்ய வேண்டும். மரணித்தவர்கள் உடலில் என்ன வகை கொரோனா தாக்கியது என்று ஜீன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். உலக சுகாதார மையம் முழுமையாக டேட்டா வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். இதை கவலை அளிக்க கூடிய வகை கொரோனா என்று உலக சுகாதார மையம் அறிவித்து இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Recommended Video

    US Economyஐ பாதிக்கும் Omicron! அப்போ India? | OneIndia Tamil
    உருமாற்றம்

    உருமாற்றம்

    இதில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதால் அதிக கவலை அளிக்கிறது என்று ஓமிக்ரான் கொரோனா குறித்து ஐசிஎம்ஆர் தலைமை மருத்துவர் மற்றும் பெருந்தொற்று குழு தலைவர் டாக்டர் சமீரான் பாண்டா விளக்கம் அளித்துள்ளார். முழுமையான டேட்டா வந்த பின்பே ஓமிக்ரான் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் எப்படி செயலாற்றும் என்று தெரிவிக்க முடியும் என்றும், மாடர்னா போன்ற எம்ஆர்என்ஏ வகை வேக்சின்களின் ஆற்றல் இதற்கு எதிராக குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Coronavirus: Will Covishield and Covaxin be effective against B.1.1529 Omicron mutant? Explains ICMR doctor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X