ஊழல், சர்வாதிகாரி என பேச தடை.. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியல் வெளியீடு
டெல்லி: நாடாளுமன்றத்தில் உள்ள இருஅவைகளிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் புதிய பட்டியல் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊழல், துஷ்பிரயோகம், துரோகம், சர்வாதிகாரம் உள்பட பல வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வார்த்தைகள் எம்பிக்கள் பேசினால் அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட உள்ளது.
Recommended Video
இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்ற 2 அவைகள் உள்ளன. மக்களவை எம்பிக்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்வர்.
மாநிலங்களை எம்பிக்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நியமிக்கப்படுவார்கள். மேலும் குறிப்பிட்ட துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கவுரவம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி சார்பிலும் எம்பிக்கள் நியமனம் செய்யப்படுவர்.

இருஅவைகளிலும் விவாதம்
இந்த இருஅவைகளிலும் மக்கள் பிரச்சனைகள், புதிய மசோதா, சட்டங்கள் குறித்து எம்பிக்கள் விவாதங்கள் நடத்துவார்கள். இந்த விவாதத்தின்போது நாடாளுமன்ற மரபுப்படி தான் எம்பிக்கள் பேச வேண்டும். குறிப்பாக அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லை மீறி இருக்கக்கூடாது. இவ்வாறு இருந்தால் அந்த வார்த்தைகள் அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது. இதையொட்டி மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலை லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் உள்ள வார்த்தைகள் இதில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள கையேட்டில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் வருமாறு:

ஊழல், துரோகம், அவமானம்,
வெட்கக்கேடு, துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தகளரி, கொரோனா பரப்புவர், துரோகம், அவமானம், குழந்தை தனம், ஏமாற்றுதல், திட்டினார், துரோகம் செய்தார், நாடகம், கபடநாடகம், திறமையற்றவர், அராஜகம் செய்பவர், அழிவு சக்தி, காலிஸ்தானி உள்ளிட்ட வார்த்தைகளை எம்பிக்கள் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொய், உண்மையல்ல, கிரிமினல்
மேலும் மோசடிக்காரர், லாலிபாப், பாப்கட், ஒட்டுகேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கொடூரமானவர், ஏமாற்றினார், கோழை, கிரிமினல், ரவுடித்தனம், பொய், உண்மையல்ல, அவமானம், கண்துடைப்பு, கழுதை, முதலை கண்ணீர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள் உள்ளிட்ட வார்த்தைகளையும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாது. இந்த வார்த்தைகள் தவிர ஏற்கனவே நடைமுறையில் உள்ள வார்த்தைகளும் இதில் அடங்கும். இத்தகைய பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை எம்பி ஒருவர் பேசும்போது மக்களவை, மாநிலங்களவையின் தலைவர்கள் அவை குறிப்பில் இருந்து நீக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications