மக்களின் பாதுகாப்பே முக்கியம்.. கோவேக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை.. பாரத் பயோடெக்
டெல்லி: மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில், இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட நிறுவனங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் கோவேக்சின் இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது ஆகும். கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்தது.

இந்த நிலையில், தான், கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா சமயத்தில் இந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா வேக்சின் தான் பல கோடி பேருக்குச் செலுத்தப்பட்டது. இந்தியாவிலும் இது தான் கோவிஷீல்ட் என்று பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் தங்களுக்குத் தடுப்பூசியைப் போட்டதால் தங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. எனினும், இதை மருத்துவர்கள் மறுத்து இருந்தனர்.
இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம் இன்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவேக்சின் தடுப்பூசியால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருப்பதாவது:- கோவேக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை.
ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படது. கோவேக்சின் தடுப்பூசியின் தன்மை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். கோவேக்சின் தடுப்பூசியின் போது சுமார் 27 ஆயிரம் வகைகளில் ஆய்வு செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்க விளைவு ஏற்படலாம் என்று கூறிய பிறகு மக்கள் மத்தியில் லேசான அச்சம் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாக எந்தவொரு தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவுகள் என்பது வேக்சின் போட்டு சில வாரங்களில், அதாவது 1-6 வாரங்களில் நடப்பதாகவே இருக்கும்.
எனவே, இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசி எடுத்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை" என்றார். தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவனும் கிட்டதட்ட இதைக் கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். இப்போது வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் வேக்சின் போட்டு ஒரு மாதத்திற்குள் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் தான் என்றும் அதன் பிறகு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக ரெக்கார்ட் இல்லை .
இந்த டிடிஎஸ் பக்கவிளைவுகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே பதிவாகியுள்ளன. பல கோடி பேருக்கு இந்த வேக்சின் போடப்பட்டதில் வெகு சிலருக்கு மட்டுமே இந்த அரிய பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்குப் பிறகு டிடிஎஸ் யாருக்காவது ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. அது குறித்து நம்மிடம் துல்லியமான தகவல்கள் இல்லை. எனவே நாம் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications