கோவாக்சின், கோவிஷீல்டு மிக்சிங் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம் - ஐசிஎம்ஆர்
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதேநேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை காக்கும் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணி மக்களில் சிலர் முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியும் மக்கள் போட்டுக் கொள்கின்றனர். இதனால் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில், கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவிகிதம் ஆகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவிகிதம் ஆகும்.
இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சில இடங்களில் தடுப்பூசி மாற்றிபோடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 48 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 50,10,09,609 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதனை குறிபிட்டு பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ள நிலையில், கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மோடி, கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது.
இதை மேலும் அதிகரித்து, அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய நம்பிக்கையுடன் உள்ளோம். கோவிட்19க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின், கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் 2 டோஸ் தடுப்பூசிகள். அதாவது, முதலில் ஒரு டோஸ் செலுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு மற்றொரு டோஸ் செலுத்த வேண்டும். இந்த நிலையில் அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம், ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில், 85 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தங்களது ஒற்றை டோஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு இந்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா சனிக்கிழமையன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications