கொரோனா வரப் போகுதாம்-பாதயாத்திரையை நிறுத்தனுமாம்..ராகுல் காந்திக்கு நெருக்கடி தரும் மத்திய பாஜக அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகளை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது பாதயாத்திரையில் பின்பற்ற வேண்டும் அல்லது பாதயாத்திரையையே ஒத்திவைக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்கிறது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை (பாரத் ஜோடோ யாத்திரை) மேற்கொண்டு வருகிறார். தற்போது ஹரியானா மாநிலத்தில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையை தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

Covid 19 : Union Govt urges Rahul Gandhi to Postpone Bharat Jodo Yatra

ராகுல் காந்தியின் பாதயாத்திரை சுமார் 3750 கி.மீ. என கணக்கிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை வரும் பிப்ரவரி மாதத்தில் காஷ்மீரில் முடிவடையக் கூடும். ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் பல்வேறு பிரமுகர்கள், துறைசார் வல்லுநர்கள், மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த யாத்திரையை தொடக்கம் முதலே பாஜக மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த யாத்திரை, இந்தியாவை பிளவுபடுத்தக் கூடியது; ஒற்றுமைக்கான யாத்திரையே இல்லை என்பது பாஜக தலைவர்களின் விமர்சனம்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் 100-வது நாள் டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அணிவகுக்க உள்ளனர்.

தமிழகம் முதல் தற்போது ஹரியானா வரையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு வெளிப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினருக்கு புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. பாதயாத்திரையின் போது நடைபெறும் பொதுக் கூட்டங்களில் மத்திய பாஜக அரசு மற்றும் பாஜக சித்தாந்தங்களை கடுமையாக விமர்சித்து பேசுகிறார் ராகுல் காந்தி.

ராஜஸ்தானில் பேசிய ராகுல் காந்தி, இந்தி மொழிக்கு எதிராக ஆணித்தரமாக பேசினார். பாஜகவினர் இந்திதான் கற்க வேண்டும் என்கின்றனர்; ஆனால் ஆங்கிலம் கற்பதால்தான் ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் முன்னேற முடியும்; பாஜகவைப் பொறுத்தவரை குலத்தொழிலை செய்ய வேண்டும் என விரும்புகிறது. இதனை நாம் நிராகரிக்க வேண்டும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள் என மருத்துவ துறை வல்லுநர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். சீனாவில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவமாடுவதைத் தொடர்ந்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகின்றன.

மத்திய அரசும், அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா பரவல் அபாயம் தொடர்பான அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறது. இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கொரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதாவது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முக கவசம் அணிய வேண்டும்; கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்கிறது மத்திய அரசு. அப்படி இல்லை எனில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையையே ஒத்திவைக்க வேண்டும் என்றும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கொரோனா பரவல் என்ற காரணத்தை முன்வைத்து ராகுல் காந்தியின் பாதயாத்திரையை மத்திய அரசு தடுக்கப் பார்க்கிறது என்பது காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+