எங்கு மரண ஓலம்.. கலங்கும் பிரேசில்.. ஒரு நாளில் 1,26,315 பேருக்கு பாதிப்பு.. அதிரவைக்கும் இந்தியா
டெல்லி: உலகிலேயே உச்சமான உயிரிழப்பை பிரேசில் சந்தித்துள்ளது. அங்கு 3,733 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். இதேபோல் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 13.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 28.98லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருநது 10.77 கோடி பேர் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் தற்போது உலகம் முழுவதும் 2.29 கோடி பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
ஒரு நாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்து பிரேசிலும், அமெரிக்காவும் உள்ளன. ஒரு நாள் உயிழப்பில் பிரேசில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. மொத்த பாதிப்பில் இந்தியா வேகமாக முன்னேறிவருவதால் விரைவில் பிரேசிலை முந்த வாய்ப்பு உள்ளது.

கொரோனா உச்சம்
இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 12,926,061 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 684 பேர் மடிந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 166,892 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு உச்சம்
இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 90,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,197,031 ஆக உயர்ந்துள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,733 பேர் மரணம் அடைந்தனர். இதனால்
பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 341,097 ஆக உயர்ந்துள்ளது

மொத்த பாதிப்பு
இந்தியா பிரேசிலை அடுத்து அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 73,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,635,313 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 837 பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 571,097 ஆக உயர்ந்துள்ளது,

உலக நாடுகள்
அமெரிக்கா, இந்தியா, பிரேசில் தவிர போலந்து, இத்தாலி, மெக்ஸிகோ, உக்ரைன், பிரான்ஸ் ரஷ்யா, பெரு, ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் துருக்கி, அர்ஜெண்டினா, ஈரான், உக்ரைன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications