டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதெல்லாம் பத்தாது... மோடி அரசு வரிச்சுமையை முழுசா திரும்பப்பெறனும் - மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர்

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி பைசா கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து விலையை உயர்த்தியது வாகன ஓட்டிகளை அவதியடைய செய்தது.

 “உடனடியாக அமலுக்கு வரும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு” - என்ன காரணம்? - விளாசும் காங்கிரஸ் எம்பி! “உடனடியாக அமலுக்கு வரும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு” - என்ன காரணம்? - விளாசும் காங்கிரஸ் எம்பி!

பெட்ரோல், டீசல் விலையேற்றம்

பெட்ரோல், டீசல் விலையேற்றம்

137 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்து வந்த இந்த விலை, கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து ஒருமாதமாக விலையேற்றம் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக சென்னையில் சென்னையில் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்து உள்ளார். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்கள், இதேபோன்ற வரி குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி கருத்து

சீதாராம் யெச்சூரி கருத்து

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, "சிறிது சிறிதான நடவடிக்கைகள் நிவாரணத்துக்கு உகந்தவை அல்ல. மக்கள் விரோத மோடி அரசால் விதிக்கப்பட்ட மாபெரும் வரி விதிப்பை திரும்பப்பெறவதே இதற்கு ஒரே வரி" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
CPM general secretary Sitaram yechury tweets that withdrawal gigantic tax burden imposed by this anti people Modi govt: பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு இந்த முறையாவது குறைக்குமா என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X