ராகுலை கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ்.. ‛இந்தியா’ கூட்டணியில் அதிகமாகும் விரிசல்? பாஜக குஷி
டெல்லி: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இப்போது அவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்துள்ளது ‛இந்தியா' கூட்டணியில் விரிசல் அதிகமாகும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 26 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் நடந்துள்ளது. இந்த கட்சிகள் இடையே மாநிலம் வாரியாக நாடாளுமன்ற தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால் சிக்கல் இன்றி ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு செய்து கொள்ளும் வகையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார்.
அதாவது மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சட்னா பகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அகிலேஷ் யாதவ் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி பேசிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, ‛‛நேற்று முன்தினம் ராகுல் காந்தி பேசும்போது இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. இது ஒவ்வொரு சமூக மக்களை எடுத்துக்காட்டும் எக்ஸ்-ரே'' என கூறியது பற்றி அகிலேஷ் யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவது மிகவும் அதிசயமாக உள்ளது. இவர்கள் தான் சுதந்திரத்துக்கு பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தியவர்கள். எக்ஸ்-ரே என்பது அந்த காலத்தின் தேவை. இப்போது எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் வைத்துள்ளோம். இப்போது நோய் பரவி விட்டது. இந்த பிரச்சனையை அப்போதே தீர்த்திருந்தால் இவ்வளவு பெரிய இடைவெளி என்பது இருந்திருக்காது.
முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், தென்னிந்தியாவை சேர்ந்த கட்சிகள் மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மக்களவையில் கோரிக்கை வைத்தபோது அதனை காங்கிரஸ் கட்சி செய்ய மறுத்தது. ஆனால் இன்று அவர்கள் ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரும்புகிறார்கள்?ஏனென்றால், காலம்காலமாக அவர்களுக்கு கிடைத்த வாக்கு வங்கி இப்போது இல்லை என்பது அவர்களுக்கு தெரியும்'' என கிண்டல் செய்தார்.
‛இந்தியா' கூட்டணி அமைந்த பிறகு அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் பலமுறை காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக ‛‛மண்டல் கமிஷன் பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சி அமல்படுத்தவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இதற்கு முன்பு காங்கிரஸ் எதிராக இருந்தது'' என சாடியிருந்தார்.
அதன்பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க சமாஜ்வாதி முடிவு செய்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதியை ஏற்காமல் தனித்து போட்டியிட்டது. இதையடுத்து அகிலேஷ் யாதவ் 31 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். இந்த வேளையில், ‛‛காங்கிரஸ் கட்சியை யார் நம்புவார்கள். காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியினரை முட்டாளாக்குகிறது. இதனால் ‛இந்தியா' கூட்டணியில் நீடிப்பது பற்றி யோசித்த முடிவு எடுக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ‛இந்தியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, காங்கிரஸை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இதனால் ‛இந்தியா' கூட்டணி கரைசேருமா என்பதில் புது சந்தேகம் எழுந்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications