Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு அதிகாரி வீட்டில் அள்ள அள்ள வந்த தங்க நகைகள்.. கோடிகளில் பணம்.. அஸ்ஸாம் நுபுர் போரா யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் டாப் உயர் அதிகாரிகளில் ஒருவரான நுபுர் போரா வீட்டில் அம்மாநில காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து சுமார் 1.25 கோடி ரொக்க பணம் , சில சொத்து மற்றும் முக்கிய ஆவணங்கள், 90 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நுபுர் போராவை கைது செய்துள்ளனர்

அரசு உயர் அதிகாரிகள் அதிகப்படியான லஞ்சம் வாங்கி சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் புகார் அளிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. அவர்கள் மீது நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பது உறுதியானால் மட்டுமே அரசு சோதனையில் ஈடுபட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.

Crores of cash and gold found in Assam s top government official s house Who is this Nupur Bora

ஏனெனில் பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்கில் கடிதங்கள் எழுதுவார்கள் என்பதால், உரிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே எந்த மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், முதல்வரிடம் கூறிவிட்டு குறிப்பிட்ட உயர் அதிகாரி மீது நடவடிக்கையில் இறங்குவார்கள். அப்படி ஒரு சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு உயர் அதிகாரிக்கு எதிராக நடந்துள்ளது.

2 கோடி, தங்கம்

அஸ்ஸாம் மாநிலத்தில் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான நுபுர் போராவை நேற்று அம்மாநில காவல் துறையினர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்தனர். முன்னதாக குவஹாத்தியில் உள்ள நுபுர் போரா-வின் வீட்டில் முதல்வரின் சிறப்புப் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த திடீர் சோதனையில், ரூ.92 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கண்டறியப்பட்டது. மேலும், பர் பேட்டாவில் உள்ள அவரது வாடகை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு, அங்கு ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

Crores of cash and gold found in Assam s top government official s house Who is this Nupur Bora


நுபுர் போரா யார்

நுபுர் போரா, 2019-ஆம் ஆண்டு அசாம் சிவில் சர்வீஸில் இணைந்தவர். நம்மூரில் எப்படி டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வில் வென்று துணை ஆட்சியர் என்கிற அந்தஸ்தில் அதிகாரியாக சேருகிறார்களோ, அதுபோல் அங்கு அதிகாரியானவர் தான் நுபுர் போரா. இவர் அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது, கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோரோய்மாரி-யில் வட்டார அதிகாரியாக (Circle Officer) பணியாற்றி வருகிறார்.

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம்

அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்த ரெய்டு குறித்து கூறுகையில், நிலம் தொடர்பான சர்ச்சைக்குரிய விவகாரங்களில் நுபுர் போரா ஈடுபட்டதாக நம்பத்தகுந்த புகார்கள் கிடைத்தது. இந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். "இந்தப் பெண் அதிகாரி, பர் பேட்டா வருவாய் வட்டத்தில் (Revenue Circle) பணியில் இருந்தபோது, பணத்திற்கு ஈடாக இந்துக்களின் நிலத்தை சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு மாற்றி இருக்கிறார். நாங்கள் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள வருவாய் வட்டங்களில் பரவலாக இதுபோன்ற ஊழல் நடந்துள்ளது" என்றார்.

இந்த வழக்கில், நுபுர் போரா-வின் கூட்டாளியான சூரஜித் டெகா என்பவரின் வீட்டிலும் முதல்வரின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. பர் பேட்டாவில் நுபுர் போரா வட்டார அதிகாரியாக இருந்தபோது, அவருடன் கூட்டு சேர்ந்து பல நிலங்களை வாங்கியதாக சூரஜித் டெகா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அஸ்ஸாமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+