டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடிவுகாலம்! இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா கேஸ்கள்.. சரியும் கிராப்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் புதிதாக 284,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வாரத்திற்கு பின் இந்தியாவில் தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. கொரோனா கிராஃப் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சரிந்து வருகிறது.

இதுவரை 40,369,585 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 491,729 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 37,665,744 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,212,112 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளதால் 3ம் அலையை இந்தியா கடந்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

நம்பிக்கை.. சர்வதேச அளவில் மளமளவென சரியும் கொரோனா கேஸ்கள்.. முடிவிற்கு வரும் ஓமிக்ரான் அலை? நம்பிக்கை.. சர்வதேச அளவில் மளமளவென சரியும் கொரோனா கேஸ்கள்.. முடிவிற்கு வரும் ஓமிக்ரான் அலை?

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் இதுவரை 76,05,181 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 35756 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,98,733 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 71,60,293 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,42,316 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 79பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

ஆனால் கேரளாவில் இன்னும் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் இதுவரை 57,74,857 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 49771 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,00,740 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 54,21,307 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 52,281 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவிலும் விடாமல் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பெங்களூரில் நேற்று 22700 கேஸ்கள் பதிவானது. கர்நாடகாவில் இதுவரை 36,54,413 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 48946
பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,57,909 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 32,57,769 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 38,705 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 39 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயர்ந்தாலும் பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 32,24,236 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 29976
    பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,13,692 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 29,73,185 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,359 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 47 பேர் பலியாகி உள்ளனர்.

    English summary
    Daily cases in India gone down: Coronavirus and Omicron may have peaked already in many cities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X