டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரழிவை ஏற்படுத்தியுள்ள பனிப்பாறை வெடிப்பு கவலையளிக்கிறது... குடியரசுத் தலைவர் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பேரழிவை ஏற்படுத்தியுள்ள உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு குறித்த செய்திகள் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை வெடித்ததால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Deeply worried about the glacier burst says President Ramnath Kovind

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இதில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், உத்தரகண்ட் வெள்ளப் பெருக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகண்ட் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள பனிப்பாறை வெடிப்பு குறித்த செய்திகள் கவலை அளிக்கின்றன.

உத்தரகண்ட் வெள்ளம்... தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்... உள் துறை அமித்ஷா உறுதி உத்தரகண்ட் வெள்ளம்... தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்... உள் துறை அமித்ஷா உறுதி

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடங்கி, சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பனிப்பாறை வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கவலை தெரிவித்து ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Deeply worried about the glacier burst says President Ramnath Kovind.I Am confident that rescue and relief operations on ground are progressing well: President Ram Nath Kovind, he adds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X