Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025.. அமைதியாக நடந்த வாக்குப்பதிவு! 60.15% வாக்குகள் பதிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் 60.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

delhi election 2025 delhi assembly election 2025

டெல்லி சட்டசபை தேர்தல்

நாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் 23- ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு அமைக்க வேண்டியது அவசியம் என்பதால், டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, டெல்லியில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

டெல்லியை பொறுத்தவரை ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 2013 ஆம் ஆண்டு முதல் டெல்லி ஆட்சி அரியணையில் அமர்ந்து இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை இம்முறை வீழ்த்தி ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில் ஆம் ஆத்மி இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மும்முனை போட்டி நிலவினாலும் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டி களத்தில் உள்ளனர். டெல்லியின் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

முக்கிய வேட்பாளர்கள்

அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஆவர். அதாவது, சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார்.தற்போதைய முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பாஜக வலுவான போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால், தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த இரு தினங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி ஆகியவையும் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் டெல்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

காலையிலேயே ஓட்டு போட்ட தலைவர்கள்

முக்கிய தலைவர்கள் பலரும் காலையிலேயே வாக்களித்தனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் காலையிலேயே தனது வாக்கினை செலுத்தினார். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். குறிப்பாக அவர் வாக்காளர்களோடு வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும், டெல்லி நிர்மன் பவன் வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றினார். டெல்லி முதல்வர் அதிஷியும் காலையிலேயே தனது வாக்கினை செலுத்தினார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது மனைவி, தாய், தந்தையோடு வந்து ஜனநாயக கடமையாற்றினார். எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி டெல்லி நிர்மன் பவான் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். சோனியா காந்தி மற்றும் வயநாடு எம்பி பிரியங்கா காந்தியும் தங்களது வாக்கினை செலுத்தினர்.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மனைவி கியோகோவுடன் வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார். ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர சிங் தனது மனைவி சுனிதா திவேதியுடன் புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள கே காமராஜ் லேன் வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார்.

வாக்குப்பதிவு நிலவரம்

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.1 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த. கடந்த தேர்தலை விட 3 சதவிகிதம் அதிகமாக 9 மணி நிலவரப்படி வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 9 மணிக்கு மேலேயும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர்.

காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவிகித வாக்குகள் பதிவாகியது. பகல் 1 மணி நிலவரப்படி, டெல்லி சட்டசபை தேர்தலில் 33.31 % வாக்குகள் பதிவானது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 46.55 சதவிகித வாக்குகள் பதிவாகின. டெல்லி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

60% வாக்குப்பதிவு

டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரியின் கூற்றுப்படி, டெல்லி சட்டசபை தேர்தலில் 60.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 13,766 வாக்குச் சாவடிகளிலிருந்தும் அதிகாரிகள் புள்ளிவிவரங்களைப் புதுப்பிக்கும்போது, ​​வாக்காளர் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக வடகிழக்கு மாவட்டத்தில் 66.25 சதவீத வாக்குகளும், மிகக் குறைந்தபட்சமாக டெல்லியில் 56.86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. சட்டமன்றத் தொகுதிகளில், முஸ்தபாபாத்தில் அதிகபட்சமாக 6% சதவீத வாக்குகளும், கரோல் பாக் தொகுதியில் மிகக் குறைந்த வாக்குப்பதிவு 47.40 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+