டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி.. 62 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி.. பாஜகவிற்கு பலத்த அடி.. மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாபெரும் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியின் முதல்வராகிறார். டெல்லியில் பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஒரு பக்கம் சிஏஏ எதிர்ப்பு போராட்டம், இன்னொரு பக்கம் டெல்லி கலவரம், நிர்பயா குற்றவாளிகள் தூக்கு வழக்கு, கடுமையான பிரச்சாரம் என்று பலகட்ட பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தல் முழுக்க மிக முக்கியமான விஷயங்கள் பிரச்சாரத்தில் இடம் பிடித்தது. தலை நகரில் நடந்த தேர்தல் என்பதால், நாடு முழுக்க மக்கள் இந்த தேர்தல் மீது கவனம் செலுத்தினார்கள்.

    எப்போது

    எப்போது

    70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. கடந்த லோக்சபா தேர்தலை விட சட்டசபை தேர்தலில் 2% அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    இந்த நிலையில் டெல்லியில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அங்கு வாக்குகள் 22 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் மதியத்திற்குள் முன்னணி நிலவரங்கள் தெரிய வந்தது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி முன்னிலை வகிக்க துவங்கியது. டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது. அங்கு பெரும்பான்மை பெற மொத்தம் 36 இடங்களில் வெல்ல வேண்டும்.

    ஆம் ஆத்மி எப்படி

    ஆம் ஆத்மி எப்படி

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி தொடர்ச்சியாக தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தது. அதன்பின் பாஜக கொஞ்சம் வேகம் எடுத்து 22 இடங்கள் வரை முன்னிலை வகித்தது. ஆனால் போக போக அந்த இடங்களையும் பாஜக இழக்க தொடங்கியது. 20 இடங்கள் 10 இடங்களாக குறைந்து, பாஜக ஒற்றை இலக்கங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியது.

    காங்கிரஸ் என்ன

    காங்கிரஸ் என்ன

    இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி சீனுக்கு உள்ளேயே வரவில்லை. காலையில் ஒரு 10 நிமிடம் மட்டும் அதிசயமாக காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்தது. அதன்பின் அந்த தொகுதியிலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. கடைசியில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களில் பின்னடைவை சந்தித்தது. 60க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் மூன்றாம் இடத்தை பிடித்து, மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

    பாஜக நிலை என்ன

    பாஜக நிலை என்ன

    கடைசி கட்டத்தில் பாஜக வரிசையாக இடங்களை, இழந்து மொத்தம் 8 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது. பாஜகவின் முக்கியமான வேட்பாளர்கள் கபில் மிஸ்ரா, தஜிந்தர் பால் சிங் பக்கா என்று எல்லோரும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சி மாறி போட்டியிட்ட அல்கா லம்பா போன்றவர்களும் தோல்வி அடைந்தனர். பாஜக இதன் மூலம் டெல்லியில் மீண்டும் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

    ஆம் ஆத்மி வெற்ற

    ஆம் ஆத்மி வெற்ற

    இந்த தேர்தலில் 63 இடங்களில் ஆம் ஆத்மி இமாலய வெற்றிபெற்றது. ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் ஓஹ்லா தொகுதியில் ஆம் ஆத்மியின் அமனதுல்லா கான் வெற்றி பெற்றார். கடந்த 2015 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வென்றது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 62 இடங்களில் ஆம் ஆத்மி வென்றுள்ளது

    செம வெற்றி

    செம வெற்றி

    இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 53.68% வாக்குகள் பெற்றுள்ளது. பாஜக 38.45% வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 4.84% வாக்குகள் பெற்றுள்ளது. இதன் மூலம் மாபெரும் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியின் முதல்வராகிறார். விரைவில் இவரின் பதவி ஏற்பு விழா டெல்லியில் பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட மாநில அரசியல் தலைவர்கள் அழைக்கப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    Delhi Assembly Election Result: Who will win in the capital in the close contest?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X