மனிதத்துக்கு கிடைத்த வெற்றி.. புதிய உணவகம் தொடங்கிய 'பாபா கா தாபா' பிரசாத்.. நெட்டிசன்கள் வாழ்த்து!
டெல்லி பாபா கா தாபா உரிமையாளர் காந்த பிரசாத், புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
டெல்லி: யூடியூபில் டிரெண்டிங்கான டெல்லி பாபா கா தாபா உணவக உரிமையாளர் காந்த பிரசாத், பிரமாண்டமான புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார்.
டெல்லி மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தனர் காந்தா பிரசாத்தும், அவரது மனைவி பதாமி தேவியும். கடந்த மார்ச் மாதம் நாடு தழுதிய கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரைப் போலவே இவர்களும் வாழ்வாதாரம் இழந்தனர்.
இவர்களது நிலையை உலகறிய செய்தார் யூடியூபர் கவுரவ் வாசன். பாபா கா தாபா வீடியோ வீடியோ கடந்த சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பலரும் அந்த உணவகத்தில் குவிந்து உதவிக்கரம் நீட்டினர். இதனால் காந்த பிரசாத்தின் நிலை சற்று உயர்ந்தது.

பொருளாதார உயர்வு
இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி மால்வியா நகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது பாபா கா தாபா. வெளியூர்களில் இருந்து பாபா கா தாபாவுக்கு பலர் படையெடுத்தனர். எனவே காந்த பிரசாத்தின் பொருளாதார நிலை உயர்ந்தது.

பெரிய உணவகம்
இந்த சூழலில் காந்த பிரசாத் தற்போது தனது உணவகத்தை மேலும் விரிவுப்படுத்தியுள்ளார். சிறிய உணவகமாக இருந்த பாபா கா தாபாவை பலர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் பெரிய உணவகமாக மாற்றியுள்ளார் அவர். இந்த புதிய உணவகமும் மால்வியா நகர் பகுதியிலேயே திறக்கப்பட்டுள்ளது.

நன்றி
"நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். கடவுள் எங்களை ஆசிர்வதித்துள்ளார். எங்களுக்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் எங்களுடைய புதிய உணவகத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய மற்றும் சீன வகை உணவுகள் இப்போது பாபா கா தாபாவில் கிடைக்கும்", என்கிறார் காந்த பிரசாத்.

குவியும் வாழ்த்து
பாபா கா தாபா உரிமையாளர் காந்த பிரசாத் இந்த பொருளாதார உயர்வு மனிதத்துக்கு கிடைத்த வெற்றி என நெட்சன்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள். இன்னும் அவர் மென்மேலும் பொருளாதார ரீதியாக உயர வேண்டும், மேலும் பல உணவகங்களைத் திறக்க வேண்டும் எனவும் அவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications