தலையை இழந்த தாமரை.. பாஜகவுக்கு மரண அடி! டெல்லியின் மொத்த “பவரும்” போச்சே! மாநில தலைவர் ராஜினாமா
டெல்லி: மாநில சட்டசபை தேர்தலுக்கு இணையானதாக கருதப்பட்ட டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்து பாஜக அதிகாரத்தை பறிகொடுத்து இருக்கும் நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.
இந்தியாவின் தலைநகரும் நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றுமான டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு நடத்தப்படும் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை இதில் பாஜக வெற்றிபெற்று மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்தது.

தீவிர பிரச்சாரம்
இந்த பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். எப்படியாக மாநகராட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு பாஜகவும், கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் ஆம் ஆத்மி, காங்கிரஸும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவு
250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 50.47% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக ஆம் ஆத்மியிடம் மாநகராட்சி அதிகாரத்தை பறிகொடுத்தது.

ஆம் ஆத்மி பெரும் வெற்றி
டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றியது. பாஜக 104 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றார்கள். கடந்த 2017 தேர்தல் முடிவுகளின் படி ஆம் ஆத்மி 272 இடங்களில் ஆம் ஆத்மி 48 இடங்களிலும், பாஜக 181 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றிபெற்றது.

பலத்த அடி
டெல்லியில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக இருந்தாலும், மாநகராட்சி பாஜக வசம் இருந்ததால் தனது அதிகாரத்தை பல வகைகளில் பயன்படுத்தி வந்த அக்கட்சிக்கு இந்த தேர்தல் தோல்வி பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. பாஜக தேசிய தலைமை முழுவதும் குஜராத் மாநிலத்தில் கவனம் செலுத்தியதால் டெல்லி மாநகராட்சியை பறிகொடுத்ததாக பேச்சு அடிபடுகிறது.

மாநில தலைவர் ராஜினாமா
அதே நேரம் மாநில பாஜக நிர்வாகம் மீது தேசிய தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. குறிப்பாக டெல்லி மாநில பாஜக தலைவர் அதேஷ் குப்தா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த நிலையில் கட்சித் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அதேஷ் குப்தா அறிவித்து உள்ளார்.

புதிய தலைவர் யார்?
அவருக்கு மாற்றாக மாநில பாஜக துணைத் தலைவராக பதவி வகித்து வந்த விரேந்திர சச்தேவா, இடைக்காலமாக டெல்லி பாஜக தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் வரை விரேந்திர சச்தேவாவே டெல்லி மாநில பாஜக தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024 லோக் சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைநகரையே பாஜக பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்









Click it and Unblock the Notifications