இது ஃபீடாயின் முறை ‛அட்டாக்’.. அப்படினா? அரபு சொல்லின் பின்னணி.. டெல்லி கார் வெடிப்பில் ஷாக் தகவல்
டெல்லி டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தற்கொலைப்படை தாக்குதல் என்ற தகவலாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அது தற்கொலைப்படை தாக்குதல் இல்லை. ஃபீடாயின் முறை ‛அட்டாக்' என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஃபீடாயின் முறை ‛அட்டாக்' என்பது என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் 1வது நுழைவு வாயிலில் நேற்று மாலை 6.52 மணிக்கு சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்த காரில் இருந்து தீப்பிழம்பு பலமீட்டர் உயரத்திற்கு வானத்தில் பரவியது. இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன.

இந்த கார் வெடிப்பில் 13 பேர் பலியாகினர். 15க்கும் அதிகானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் தான் டெல்லி போலீசாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது. டெல்லி கோட்வாலி போலீசார் ‛உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 காரை டாக்டராக இருக்கும் உமர் என்பவர் ஓட்டி சென்றதும், கார் வெடித்ததில் அவரும் இறந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கார் வெடிப்புக்கு உமர் டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உள்ளது உறுதியாகி உள்ளது.
தாக்குதல் நடத்தியது டாக்டர் உமர் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் காரில் கிடந்த உடலில் டிஎன்ஏ மாதிரி மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அவரது குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முதலில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. வெடித்த காரின் உள்ளே ஒருவரின் உடல் சிதறி கிடந்தது. இதனால் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சந்தேகித்தனர். ஆனால் தற்போது அது தற்கொலைப்படை தாக்குதல் இல்லை என்பதை உளவுத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
மாறாக Fidayeen முறையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஃபீடாயின் தாக்குதலுக்கும், தற்கொலைப்படை தாக்குதலுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளது. அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நபர் என்றால் பல நாட்களுக்கு முன்பாகவே அவர் அதற்கு தயாராவார். தனது உடலையும்,உயிரையும் கொடுத்து அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும்.
தற்கொலை படை தாக்குதல் செல்வோர் கட்டாயம் இறப்பதை முன்கூட்டியே அறிந்து இருப்பார். தற்கொலை படை தாக்குதலில் இலக்கு என்பது உறுதியானது. தானும் இறந்து, பலரையும் கொல்ல வேண்டும். பெரும் சேதத்தை விளைவிக்க வேண்டும். யாரை கொல்ல வேண்டும். எந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது முன்கூட்டியே தெரியும். அதன்பிறகு தற்கொலை படை தாக்குதல் நடத்துவோர் தனது உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு அல்லது பயணிக்கும் வாகனங்களில் வெடிகுண்டுகளை எடுத்து சென்று இலக்கை அடைந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்து தனது உயிரை கொடுத்து மற்றவர்களை அழிக்க வேண்டும்.
ஆனால் ஃபீடாயின் (Fidayeen) ஃபீடாயின் தாக்குதல் என்பது கிட்டத்தட்ட தற்கொலை படை தாக்குதல் பாணியில் தான் இருக்கும் என்றாலும் உயிரை கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்த பெயர் Fidaye என்ற அரபு சொல்லில் இருந்து வந்தது. அதற்கு சுயதியாகம் என்று பொருள். தன்னையே தியாகம் செல்லுவோரை குறிக்கும். பாலஸ்தீனத்தில் தான் இந்த வார்த்தை மிகவும் பிரபலம். பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்டகால மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொரிலா தாக்குதல் நடத்துவார்கள். இந்த தாக்குதல் நடத்துவோரை இப்படி தான் அழைப்பார்கள்.
உயிரை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் இருந்தாலும் கூட மரணத்தை துச்சமாக நினைத்து தாக்குதல் நடத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த வேண்டும். ஏராளமானவர்களை கொல்ல வேண்டும். வெடிகுண்டு வீசுவது, துப்பாக்கியால் சுடுவது, வாகனங்களில் வெடிகுண்டு, வெடிபொருட்கள் நிரப்பி வெடிக்க செய்வது உள்ளிட்டவை இந்த தாக்குதலில் அடங்கும்.
இதனால் மரணத்தில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது. மாறாக எந்த காரணம் கொண்டும் சரணடைய கூடாது. போலீஸ் அல்லது விசாரணை அமைப்புகளிடம் சிக்கினால் இறக்கும் முடிவை எடுக்கலாம். இதுதான் ஃபீடாயின் முறை தாக்குதல் ஆகும். இந்த தாக்குதல் என்பது பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிடம் அதிகம் நடக்கிறது.
தற்போதும் கூட கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் போலீசாரால் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் அடீல் அகமது ராதர்
மற்றும் திங்கட்கிழமை காசிகுந்த் பகுதியை டாக்டர் முஜாமில் ஷகீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேருக்கும் உமருக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் உள்ளது. ஏனென்றால் இவர்கள் 3 பேரும் ஃபரிதாபாத்தை மையப்படுத்தி செயல்பட்டவர்கள்.
தற்போது அடீல் அகமது ராதர், முஜாமில் ஷகீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் எங்கே தன்னையும் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசர அவசரமாக உமர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். தாக்குதல் நடத்தி தப்பினாலும் போலீசார் பிடிக்க வாய்ப்புள்ளது என்பதால் அவர் தனது உயிரை விட்டு இருக்கலாம். இந்த சம்பவம் என்பது ஃபீடாயின் தாக்குதல் வகையுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications