‛குதிரைபேரம்’.. டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் தோற்ற பாஜக.. ஆம்ஆத்மி மீது புதுக்குண்டு..ட்விஸ்ட்
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய பாஜகவின் ரேகா குப்தாவை வீழ்த்தி மேயர் பதவியை கைப்பற்றினார்.
டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். இதன்மூலம் டெல்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பாஜகவின் வீரநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதாக பரபரப்பான புகாரை பாஜக தெரிவித்துள்ளது. வழக்கமாக பாஜக மீது இந்த குற்றச்சாட்டு எழும் நிலையில் பாஜக சார்பில் தற்போது ஆம்ஆத்மி மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 3 மாநகராட்சிகள் இருந்தன. சமீபத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 250 வார்டுகள் கொண்ட ஒரே மாநகராட்சியாக டெல்லி உருவானது. இந்த மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ல் தேர்தல் நடந்தது.
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் மும்முனை போட்டி நிலவிய நிலையில் 50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 7 ம் தேதி எண்ணப்பட்டனர்.

ஆம்ஆத்மி வெற்றி
மொத்தம் 250 வார்டுகள் உள்ள நிலையில் மாநகராட்சியில் அதிகாரத்தை கைபற்ற 126 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இதில் ஆம்ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. பாஜ 104 வார்டுகளிலம், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. மற்றவர்கள் 3 வார்டுகளில் வாகை சூடியிருந்தனர். கடந்த 2007 முதல் 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியில் பாஜக அதிகாரத்தை கைப்பற்றி வந்த நிலையில் அதன் வெற்றி ஓட்டத்துக்கு ஆம்ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது.

மாநகராட்சி மேயர் தேர்தல்
இதையடுத்து மாநகராட்சியில் மேயரை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இதையடுத்து மேயர் தேர்வு செய்வதற்கான தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினர்கள் மூலம் பாஜக மேயர் பதவியை பிடிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் படியேறினர். இதையடுத்து உச்சநீதிமன்றம் நியமன உறுப்பினர்களுக்கு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஓட்டுரிமை இல்லை என கூறியது. இந்நிலையில் இன்று மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடந்தது.

ஆம்ஆத்மி வேட்பாளர் வெற்றி
ஆம்ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், பாஜக சார்பில் ரேகா குப்தா ஆகியோர் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 250 கவுன்சிலர்கள், 7 லோக்சபா எம்பிக்கள், 3 ராஜ்யசபா எம்பிக்கள், 14 எம்எல்ஏக்கள் என மொத்தம் 274 பேர் வாக்களிக்க தயாராக இருந்தனர். இருப்பினும் 241 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இதில் 150 ஓட்டுக்கள் பெற்று ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சி மேயரானார். பாஜகவின் ரேகா குப்தா தோல்வியடைந்தார். மேலும் டெல்லி மாநகராட்சியின் துணை மேயர் பதவியையும் ஆம்ஆத்மி கட்சியே கைப்பற்றி உள்ளது.அதன்படி துணை மேயராக ஆலி மொஹட் இக்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெல்லி ஓபராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.

குதிரை பேரம் புகார்
இந்நிலையில் தான் டெல்லி மேயர் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவின் ரேகா குப்தா ஆம்ஆத்மி கட்சியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛டெல்லி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மோசமான அரசியல் செய்துள்ளது. குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜக கவுன்சிலர்களை அணுகி எம்எல்ஏ சீட், பணம் தருவதாக கூறியிருந்தனர். ஆம்ஆத்மி கட்சி வெளியில் சொல்வது ஒன்றாகவும், செயல்படுவது வேறு விதமாகவும் உள்ளது. இந்த விஷயத்தில் 10 பாஜக கவுன்சிலர்களை ஆம்ஆத்மி கட்சியினர் அணுகினர்'' என சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளார். சமீபகாலமாக பாஜக தான் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பிற கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ட்விஸ்ட்டாக ஆம்ஆத்மி மீது பாஜக இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications