ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு:ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவுக்கு கோர்ட் அனுமதி
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரம் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தது.
இம்மனுக்கள் மீதான விசாரணை நேற்று நிறைவடைந்தது. இன்று இவ்வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகர் உத்தரவிட்டார்.
நாளை கைது செய்து விசாரணை
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து டெல்லி திஹார் சிறையில் ப. சிதம்பரத்தை நாளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்கின்றனர். அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications