நாங்க தடை விதித்தும் டெல்லியில் வீட்டை இடிச்சாங்களா? சீரியசான விஷயம் இது.. உச்ச நீதிமன்றம் சுளீர்!
டெல்லி: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த பின்பும் கூட டெல்லியில் செய்யப்பட்ட இடிப்பாடுகள் குறித்து விசாரிப்போம்.. இதை நாங்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டிடங்களை கட்டியதாக கூறி நேற்று பல்வேறு கட்டிடங்கள் வீடுகள் இடிக்கப்பட்டன. அனுமன் ஜெயந்தி கலவரத்திற்கு பின்பாக அங்கு இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், பிஆர் காவாய் ஆகியோர் அமர்வு இன்று வழக்கை விசாரணை செய்து வருகிறது.

அரசு தரப்பு
இதில் வாதம் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சாலைகளில் மக்கள் நடக்க கூடிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே அகற்றப்பட்டு இருக்கிறது. சிறிய சிறிய கடைகள் போன்றவற்றை மட்டுமே உடைத்து இருக்கிறோம். இஸ்லாமியர்கள் மட்டும் குறி வைக்கப்பட்டதாக சொல்லபடுவது தவறானது. எல்லா சமயங்களிலும் கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் நாங்கள் நோட்டீஸ் கொடுத்தோம், என்று குறிப்பிட்டார்.

பிருந்தா காரத்
இந்த வழக்கில் சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் சார்பில் சுரேந்திர நாத் என்ற வழக்கறிஞர் ஆஜர் ஆனார். அதில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த பின் அங்கு இடிபாடுகள் தொடர்ந்து நடந்தது. 10.45க்கு உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தது. 12.25 வரை அங்கு இடிபாடுகள் நீடித்தது. பிருந்தா காரத் மட்டும் உள்ளே சென்று தடுக்கவில்லை என்றால் மொத்த சி பிளாக் இடிக்கப்பட்டு இருக்கும், என்று குறிப்பிட்டார்.

விதி மீறல்
இதையடுத்து நீதிபதிகள், கோர்ட் உத்தரவு எப்போது மேயரிடம் கொடுக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் சுரேந்திர நாத், 11 மணிக்கே இந்த விஷயம் மேயருக்கு தெரியும். அவர் ஊடகங்களில் அளித்த பேட்டியில் கோர்ட் உத்தரவை மதிப்பேன் என்றார். கோர்ட் ஆர்டர் தெரிந்தும் கூட அவர் தொடர்ந்து அங்கு ஒன்றரை மணி நேரம் கட்டிடங்களை இடித்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
Recommended Video

சீரியஸ்
இதையடுத்து கோபமாக கேட்ட நீதிபதிகள்.. நாங்கள் உத்தரவு பிறப்பித்த பின்பும் செய்யப்பட்ட இடிப்பாடுகள் குறித்த விஷயங்களை நாங்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறோம். இதை பற்றி விசாரிப்போம் என்று குறிப்பிட்டனர். அதோடு அங்கு இருக்கும் கட்டிடங்களை இடிக்க ஏன் இத்தனை புல்டோசர் என்று கேள்வி எழுப்பினர். பின்னர் கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்று அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
-
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை










Click it and Unblock the Notifications