டெல்லியில் ஓயாத மரண ஒலம்... மன அழுத்தம்: கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் தற்கொலை
கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் விவேக் ராய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 1 மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சூழலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரியும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மயானங்களில் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக நோயாளிகள் மரணமடைகின்றனர்.

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சூழலில் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேம் ராய் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினசரி ஏற்பட்ட கொரோனா உயிர் பலிகளால், அவர் கடுமையான மன அழுத்தத்தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவி வாந்தேத்கர், கொரோனா முன்களப்பணியாளர் பல உயிர்களைக் காப்பாற்றியவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறியுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications