"எய்ட்ஸ்".. செதில் செதிலாக.. பெண்ணின் ஒரே ஒரு "தலைமுடி".. கீதா காலனி பாலம் கிட்ட அலறிய போலீஸ்.. ஐயயோ
டெல்லி: டெல்லி நாளுக்கு நாள் மிரட்டியெடுக்கிறது.. தலைநகரம் கொலைநகரமாகி பொதுமக்களை கதிகலங்க வைத்துவருகிறது.. இதோ இன்னொரு பெண்ணின் கோர சடலம் சிக்கி உள்ளது.
ஷ்ரத்தா கொலையின் அதிர்ச்சியே இன்னமும் அடங்கவில்லை.. மொத்தம் 38 துண்டுகளாக அந்த பெண்ணை வெட்டியிருந்தான் காதலன் அப்தாப்.. கொலை செய்து, வீட்டிற்குள்ளும், ப்ரிட்ஜிக்குள்ளும், வைத்திருந்ததுடன், நாய்க்கும் வீசியெறிந்திருந்தான்.. ஷ்ரத்தாவின் முழு உடல் பாகங்களும் இன்னமும் மீட்கப்படவில்லை என்கிறார்கள்.

அதற்குள் இன்னொரு பயங்கரம் இதேபோல மும்பையில் நடந்தது.. மனோஜ் என்ற அந்த நபருக்கு 56 வயதாகிறது.. சரஸ்வதி என்ற 36 வயது பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.. மனோஜ் ஒரு எய்ட்ஸ் நோயாளி.. சரஸ்வதியுடன் ஏற்பட்ட தகராறில், கொடூரமாக கொன்றுவிட்டார். சடலத்தை மீட்க போன போலீசாருக்கே தலை சுற்றி வாந்தி வந்துவிட்டதாம்.
குக்கர் சரஸ்வதி: குக்கரில் வேகவைத்த மனித சதைகள் இருந்தன.. பாதி எரிந்த எலும்புகள் டப்பாக்களில் இருந்திருக்கின்றன.. மிச்ச உடல் துண்டுகள் பக்கெட்களில் கிடந்துள்ளன.. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்.. பெண்ணை இவ்வளவு கொடூரமாக கொல்வதற்கு, மனோஜ் கையில் எடுத்துள்ள யுக்தி, டெல்லி ஷ்ரத்தா கொலைதான் என்று வாக்குமூலம் தந்துள்ளார். இது தொடர்பான விசாரணையும் இன்னும் முடியவில்லை.
பெண் சடலம்: அதற்குள் இதே டெல்லியில் மறுபடியும் ஒரு பெண்ணின் சடலம் வெட்டி கூறுபோடப்பட்டுள்ளது.. டெல்லியில் உள்ள கீதா காலனி பாலம் பகுதியில் செதில் செதிலாக அந்த பெண் வெட்டப்பட்டுள்ளதாகவும், உடல் பாகங்கள், அங்குள்ள பாலத்துக்கு அடியில் சிதறி கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, பாலத்திற்கு அடியில் சிதறிக்கிடந்த உடல்பாகங்களை கண்டு உறைந்துபோய் நின்றனர்.
காரணம், உடல் பாகங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன.. அந்த பெண்ணின் தலையை காணவில்லை.. இதனால் பாலத்தை சுற்றி தலையை தேடும் பணி ஆரம்பமானது.. இறுதியில், தூரமாக வீசப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தலைப்பகுதியும் கிடைத்தது. இப்போது மொத்த உடல் பாகங்கள், தலையை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
உடல் துண்டுகள்: ஆனால், யார் அந்த பெண் என்று இதுவரை தெரியவில்லை.. எதற்காக கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை.. அவரை கொடூரமாக துண்டாக்கியவர்கள் யார் என்றும் தெரியவில்லை.. பாலத்துக்கு அடியில் பெண்ணின் உடல் துண்டுகள் சிதறி கிடப்பதாக தகவல் பரவியதுமே, அந்த பகுதி மக்கள் வெலவெலத்து போய்விட்டனர். பெண்ணின் தலையை தேடியெடுக்கும் வரை, அந்த ஏரியா முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டுவிட்டது.

இப்போதைக்கு இரண்டு கருப்பு பாலித்தீன் பைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. அதில், ஒரு பாலித்தீனில் பையில் தான் தலை இருந்திருக்கிறது.. இன்னொரு பாலித்தீன் பையில் உடலின் மற்ற பாகங்கள் இருந்துள்ளன.. இதைத்தவிர சில பாகங்கள் வெளியே கிடந்துள்ளன..
கீதா காலனி மேம்பாலம் அருகேயே இரண்டு வெவ்வேறு இடங்களில் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு தில்லி காவல்துறை இயக்குநர் ஜெனரல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..
வேகவைத்து அரைத்த கொடுமை: இப்போதைக்கு முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளதாம்.. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 35 முதல் 40 வயதிருக்கலாம் என்கிறார்கள்.. தடயவியல் குழுக்கள் பாகங்களை ஆய்வு செய்து வரும் அதே வேளையில் மேலும் ஆதாரங்களுக்காக அப்பகுதியில் தேடி வருவதாக டிஜிபி மேலும் தெரிவித்துள்ளார்.
சில துண்டுகளை வேகவைத்து அரைத்து, அதையும் இங்கு வந்து ரகசியமாக கொட்டியதாக போலீசார் கூறுகிறார்கள்.. துர்நாற்றம் பரவுவதைத் தடுக்க உடல் துண்டுகளில் எண்ணெயை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. எனினும் இதுகுறித்து பல்வேறு யூகங்கள் வெளிவந்தபடியே உள்ளதால், போலீசார் உண்மைத்தன்மையை விரைவில் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications