காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க கோரும் என்ஐஏ வழக்கு- நீதிபதி விலகல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி -ஜேகேஎல்எப் எனும் காஷ்மீர் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக்குக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரி என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு ஏஜென்சி) தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி அமித் ஷர்மா விலகுவதாக தெரிவித்துள்ளார்.

1980களின் இறுதி மற்றும் 1990களில் ஜம்மு காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பதற்கான பயங்கரவாத குழுக்கள் கை ஓங்கி இருந்த போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் இணையாமல் தனி நாடாக இருக்க வேண்டும் என தேசிய இன அடிப்படையில் ஆயுதப் போராட்டம் நடத்தியது ஜேகேஎல் எனும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி. இதன் தலைவர் யாசின் மாலிக்.

yasin malik kashmir

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைந்து நடத்திய கருத்தரங்குகள், போராட்டங்களில் யாசின் மாலிக்கும் அவரது இயக்கமும் பங்கேற்றிருந்தது. இந்த வகையில்தான் 2013-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கடலூரில் சீமான் புதியதாக நாம் தமிழர் கட்சி தொடங்கிய கால கட்டத்தில் யாசின் மாலிக்கும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டு பங்கேற்றிருந்தார்.

யாசின் மாலிக் மீது 2017-ம் ஆண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்குகளைப் பதிவு செய்தது. பயங்கரவாத செயல்களுக்கு ஆயுத உதவி செய்தார் யாசின் மாலிக் என்பது வழக்கு. 2019-ம் ஆண்டு இந்த வழக்கில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். அப்போது ஊபா எனும் பாதுகாப்புச் சட்டமும் மாலிக் மீது பாய்ந்தது. 2022-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

யாசின் மாலிக்குக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றது என்.ஐ.ஏ. ஆனால் யாசின் மாலிக்குக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் தமக்கு மருத்துவ சிகிச்சை வழங்க கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே யாசின் மாலிக்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதித்து அவருக்கு மரண தண்டனைதான் விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

என்.ஐ.ஏ.வின் மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் பிரதிபா எம்.சிங் மற்றும் அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தொடங்கிய போது அமித் ஷர்மா இந்த விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஆகஸ்ட் 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை பொறுப்பு தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+