"மனைவியை வீட்டு வேலை செய்ய சொல்வது குற்றம் இல்லை.." விவாகரத்து வழக்கு.. டெல்லி ஐகோர்ட் பரபர கருத்து
டெல்லி: மனைவியை வீட்டு வேலை செய்யச் சொல்லி கணவன் சொல்வதைக் கொடுமை என கருத முடியாது என்று கூறி, டெல்லி உயர்நீதிமன்றம் ஆணுக்கு விவாகரத்து வழங்கியது.
விவாகரத்து வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய சில கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது மனைவியை வீட்டு வேலை செய்யச் சொல்லி கணவன் சொல்வதைக் கொடுமை என கருத முடியாது என்று கூறி, டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு: தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும் குடும்ப நல நீதிமன்ற அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்த நிலையில், அவர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "திருமணமான பெண்ணை வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வதை வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் உடன் ஒப்பிட முடியாது... ஏனென்றால் திருமணமான பெண்ணுக்குத் தனது குடும்பத்தின் மீது அன்பு இருக்கும். ஒரு திருமணத்தில் நோக்கமே எதிர்கால பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.. மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பதில் எந்த கொடுமையும் இல்லை.
கருத முடியாது: குறிப்பிட்ட சூழல்களில் கணவன் எப்போதும் நிதி சார்ந்த பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். மனைவி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். தற்போதைய வழக்கு அதுதான். எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரை மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவன் எதிர்பார்த்தாலும், அதைக் கொடுமையாகக் கருத முடியாது" என்றனர்.
இந்த வழக்கில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை உறுப்பினரான கணவர், தனது மனைவி வீட்டு வேலைகளைச் செய்வதில்லை என்கிறார். மேலும், திருமணமான பிறகும் தன்னையும் தனது குடும்பத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் தனது மனைவி தன் மீதே பொய்யான கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தனது மனுவில் கூறி இருக்கிறார். மேலும், தனது பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் வர வேண்டும் என மனைவியும் அவரது குடும்பத்தினரும் வலியுறுத்தினர் என்றும் அவர் கூறியிருந்தார்.
கொடுமை: இதைக் குறிப்பிட்ட நீதிபதி, இப்படி கணவனை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழச் சொல்வது, கொடுமைக்குச் சமம் என்று குறிப்பிட்டது. டெல்லி ஐகோர்ட் மேலும் கூறுகையில், "வருமானம் இல்லாத அல்லது குறைந்த வருமானம் கொண்ட வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ள ஒரு மகனுக்குத் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு மகன் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வது இந்து கலாச்சாரத்தின்படி சரியானது இல்லை.
கணவனை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வரச் சொல்வது கொடுமைக்குச் சமம் என்று இதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்தியாவில் இந்து இளைஞன் ஒருவர் திருமணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வது சரியானது இல்லை. ஆனால், இந்த வழக்கில் கணவர் தனது மனைவியின் விருப்பத்திற்கு இணங்கினார். அவரது திருமண வாழ்க்கையைக் காப்பாற்றத் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். இருப்பினும், அந்த பெண் வேறு காரணங்களைச் சொல்லிவிட்டுப் பெற்றோருடன் சென்றுவிட்டார்.
அவசியம்: திருமணப் பந்தத்தை வளர்ப்பதற்கு, இரு தரப்பினரும் ஒன்றாக வாழ்வதும் அவசியம்.. இப்படிப் பிரிந்து சென்று தனித்தனியாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்.. தற்காலிகப் பிரிவினை மனைவியின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வைத் தருகிறது, மற்றவர் திருமணப் பந்தத்தைத் தொடர விரும்பவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறியிருந்தது.
தன் மீது பொய்யான கிரிமினல் புகார்களை அந்த பெண் கொடுத்ததாகக் கணவன் புகார் அளித்தது குறித்து டெல்லி ஐகோர்ட், "கிரிமினல் புகார் கொடுப்பது கொடுமையாகக் கருத முடியாது. அதேநேரம் ஆதாரமற்ற வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்துவதைக் கொடுமையாகவே கருத முடியும். இந்த வழக்கைப் பொறுத்தவரைக் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மனைவிக்குக் கணவனுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
விவாகரத்து: கணவன் தனது திருமணத்தைக் காக்கப் பல முயற்சிகளைச் செய்த போதும் மனைவி தனது பெற்றோருடன் தான் இருந்துள்ளார். அந்த பெண் தனது திருமணக் கடமைகளைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், தனது கணவனை ஒதுக்கி வைப்பதன் மூலம் அவரது தந்தையாக அவரது உரிமையையும் பறித்துவிட்டார். மகனைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13(1) (ia) இன் கீழ் நீதிமன்றம் அந்த நபருக்கு விவாகரத்து வழங்கியது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications