Delhi Lok Sabha Election Results LIVE: டெல்லியில் க்ளீன் ஸ்வீப்.. 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது தேசிய தலைநகரான டெல்லியில் மொத்தம் ஏழு தொகுதிகள் இருக்கும் நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. அங்கு மொத்தம் ஏழு தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்திலும் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது.

நமது நாட்டில் கடந்த 1.5 மாதங்களாக நடந்த லோக்சபா தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

Lok Sabha Election 2024 BJP Congress 2024

காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது.

தலைநகர் டெல்லி: தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருந்தது. இதில் தற்போது வரை அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி எங்கும் முன்னிலையில் இல்லை. இது கெஜ்ரிவால்- காங்கிரஸ் கூட்டணிக்கு மிக பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது.

டெல்லியில் மொத்தம் இருப்பதே ஏழு லோக்சபா இடங்கள் தான் என்றாலும், அதில் வெல்வது தலைநகரில் உள்ள மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. டெல்லியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் இந்த 7 தொகுதிகளையும் பாஜக தான் வென்றது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை,

பாஜக: குறிப்பாகக் கடந்த 2019 லோக்சபா தேர்தலில், டெல்லியில் பாஜகவிடம் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுக்கே மக்கள் அதிகம் வாக்களித்தனர். இதனால் இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையிலான இந்த போரில் ஆம் ஆத்மியாலும் வெல்ல முடியவில்லை. அந்தத் தேர்தலில் டெல்லியில் பாஜக சுமார் 56 சதவீதம், காங்கிரஸ் 22 சதவிகித வாக்குகளைப் பெற்றன.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மியால் லோக்சபா தேர்தலில் 18 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. குறிப்பாக 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது. இந்தச் சூழலில் தான் இந்த முறை டெல்லியில் லோக்சபா தேர்தலைக் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இணைந்து எதிர்கொண்டுள்ளது.

யாருக்கு: பாஜக அங்குள்ள ஏழு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நிலையில், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இதுவரை வெளியான பெரும்பாலான சர்வேக்களில் இந்த முறையும் பாஜகவே டெல்லியில் க்ளீன ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்யும் எனக் கூறப்பட்டு இருந்தது. எக்ஸிட் போல் சர்வேக்களில் வந்தது போல பாஜகவே மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அங்குள்ள ஏழு தொகுதிகளிலும் இந்த முறையும் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி அமைத்த போதிலும் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+