"மோடி"யை நிற்க வைத்து நிதின் கட்காரி கொடுத்த 'அந்த மரியாதை'.. பற்றி எரியுதய்யா சோசியல் மீடியா!
டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி விவாதிக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி போட்டியிட்டார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் புரவலரே நிதின் கட்காரி. அதுவும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் தொகுதியிலேயே கட்காரி போட்டியிடுகிறார். இதனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு நிதின் கட்காரியின் வெற்றி மிகவும் முக்கியமானது கவுரவமானது.

ஆனால் பாஜகவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் பிரதமர் பதவிக்கு எங்கே நிதின் கட்காரி முன்னிறுத்தப்படுவாரோ என்கிற அச்சம் மோடி-அமித்ஷா தரப்புக்கு எப்போதுமே உண்டு. இதனால்தான் நிதின் கட்காரிக்கு எதிராக தேவேந்திர பட்னாவிஸை இந்த அணி களமிறக்கியது. இந்த தேர்தலிலும் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டுகளில் ஒன்றுதான் நாக்பூரில் நிதின் கட்காரியை எப்படியாவது தோற்க வைக்க வேண்டும் என்பது. இது ஆர்.எஸ்.எஸ்.- நிதின் கட்காரி அணிக்கும் தெரிந்தாலும் அதிருப்தி வெடிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரி அமோக வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸும் அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் இன்று டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அந்தக் கூட்டமே ஒரு சேர "மோடி" "மோடி" என எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. இதற்கு மோடியும் எழுந்து நின்று இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். ஆனால் அத்தனை பேரும் எழுந்து நின்ற போதும் மோடிக்கு நேர் எதிராக அமர்ந்திருந்த நிதின் கட்காரி மட்டும் அப்படியே அமர்ந்திருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவுதான் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பற்றி எரிகிறது.
தம்மை தோற்கடிக்க சதி செய்தவர்களாயிற்றே.. என்ற கோபத்தை நிதின் கட்காரி இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என "மோடிக்கு கிடைத்த மரியாதை" என கிண்டல் தொனியுடன் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications