மலேசியாவில் இருந்து கால்.. கடத்தப்பட்ட டெல்லி சிறுமி.. உறவினர்களே செய்த அதிர்ச்சி சம்பவம்
டெல்லி: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லி அருகே ஆறு வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இந்தியா – நேபாள எல்லையில் வைத்து மீட்டனர். இதுதொடர்பாக சிறுமியின் உறவினர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை கடத்திய காரணம் அதிரவைக்கிறது.
மத்திய டெல்லியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஆகஸ்ட் 27ம் தேதி தன் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியில் வந்துள்ளார். ஆனால் சிறுமி வீட்டுக்கு திரும்பவில்லை. பதற்றமான சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மத்திய டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே சிறுமியின் பெற்றோரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, மலேசியா எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரில் பேசியவர்கள், “உங்களின் மகளை நாங்கள்தான் கடத்தியுள்ளோம்.” என்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், “பணம் கொடுத்தால் தான் குழந்தையை திருப்பித் தருவோம்” என்றும் கூறியுள்ளனர். இந்தத் தகவலை சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் தொழில்நுட்ப குழு அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதுகுறித்து மத்திய டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஹர்ஷவர்தன் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்தோம். சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தோம். எங்கள் தனிப்படை போலீஸ் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். அதன் தொடர்ச்சியாக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தெரியவந்தது. சிறுமியை அவரது உறவினர்களே கடத்தினார்கள்.
கிஷான், அவரின் மனைவி சாஹிதா, பிண்டு, சுஷில் , சுனிதா ஆகிய ஐந்து பேர் சிறுமியை கடத்தியுள்ளனர். அவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு வாட்ஸ் அப் எஎண்ணில் மெசேஜ் மற்றும் போன் செய்து பணம் கேட்டனர். அவர்களுக்கு அழைப்பு வந்தது மலேசியா எண். அவர்களின் உறவினர் ஒருவர் மலேசியாவில் உள்ளார். அந்த உறவினரின் மலேசிய நண்பரின் ஒருவர் எண்ணை வாங்கி பேசியிருக்கிறார்கள்.
அந்த எண் குறித்து தொழில்நுட்ப ஆய்வு செய்தபோது, அது இந்தியா – நேபாள நாடுகளின் எல்லையான சிதாமர்ஹி என்ற பகுதியில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று அந்த ஐந்து பேரையும் கைது செய்து, சிறுமியை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தோம். விசாரணையில் நேபாளில் உள்ள சிறுமியின் மாமாவுக்கும், இஷானுக்கும் பணம் விவகாரத்தில் பிரச்னை இருந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் சிறுமியை கடத்த திட்டமிட்டனர்.
இதையடுத்து கிஷான் மற்றும் அவரின் மனைவி சாஹிதா தங்களின் நண்பர்கள் உதவியுடன் சிறுமியை கடத்த திட்டமிட்டனர். இதற்காக சிறுமியின் வீட்டு அருகே சென்ற கிஷான் மற்றும் சாஹிதா, அவருக்கு சாக்லேட் கொடுத்து ஸ்கார்பியோ காரில் கடத்தி சென்றுள்ளனர். என்றார்.” இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications