டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செர்னோபிலே தேவலாம்.. சுவாசிக்க திணறும் டெல்லி.. அபாய கட்டத்தில் காற்று மாசு.. மக்கள் அச்சம்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை தொட்டு இருக்கிறது. 8 இடங்களில் காற்று சுவாசிக்க முடியாத நிலையை எட்டி இருக்கிறது.

தலைநகர் டெல்லி தற்போது சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது.

இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை டெல்லியில் உருவாகி உள்ளது.இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.

ஆமா.. 50-50-ன்னா என்னா? மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா? சிவசேனாவை வாரும் ஓவைசிஆமா.. 50-50-ன்னா என்னா? மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா? சிவசேனாவை வாரும் ஓவைசி

மோசமான புள்ளிகள்

மோசமான புள்ளிகள்

தற்போது டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. இதன் அர்த்தம் அங்கிருக்கும் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்றதாகும். அதன்படி டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது.

மழை வந்தது

மழை வந்தது

இன்று காலை டெல்லியில் மழை பெய்தது. ஆனாலும் அங்கு காற்று மாசு குறையவில்லை. பஞ்சாப்பில் இருந்து அதிக அளவு புகை டெல்லியை நோக்கி வருகிறது. அதனால் டெல்லியில் இன்னும் ஒரு வாரத்திற்கு இதே போன்ற மோசமான நிலைதான் நீடிக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ எமர்ஜென்சி

மருத்துவ எமர்ஜென்சி

அதிக காற்று மாசு காரணமாக தற்போது டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து டெல்லியில் உடனடியாக கட்டுமான பணிகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது. அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் இயங்க முடியாது. மேலும் வெடி வெடிக்க, குப்பைகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்ன வீடியோ

இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு எப்படி இருக்கிறது என்று இவர் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அங்கிருக்கும் கட்டிடங்கள் தெரியாத அளவிற்கு புகை மண்டலம் சூழந்து இருக்கிறது. ரஷ்யாவில் அணு உலை வெடித்து வாழ தகுதியற்று போன செர்னோபில் நகரமே இதை விட நன்றாக இருக்கும் என்று பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

மிக மோசம்

மிக மோசம்

இந்த மோசமான வானிலை காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள் இந்த காற்று மாசுபாடு காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதனால் மோசமான நோய்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

English summary
Delhi struggles to breathe after the air reaches Severe Plus in 8 places today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X