பழைய வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு.. டெல்லி மக்கள் கடும் எதிர்ப்பால் திட்டம் நிறுத்தி வைப்பு!
டெல்லி: காற்று மாசை குறைக்க, பழைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப டெல்லி பாஜக அரசு தடை விதித்திருந்தது. இதனால் 62 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை குளிர் காலம் வரும்போதெல்லாம் டெல்லி கடுமையான காற்று மாசை எதிர்கொண்டு வருகிறது. வாகன புகை இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே வாகன புகையை கட்டுப்படுத்த புதிய நடைமுறையை டெல்லி பாஜக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை விதிக்கப்பட்டது.

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு ஜூலை.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி டெல்லியில் உள்ள 498 பெட்ரோல், டீசல் பங்குகளில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமராக்கள், 10, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அடையாளம் கண்டு பெட்ரோல் போடுபவர்களுக்கு தகவல் கொடுக்கும். இதன் அடிப்படையில் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் கொடுக்கப்படும் அல்லது மறுக்கப்படும். இந்த முடிவால் டெல்லியின் சுமார் 62 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
காற்று மாசு காரணங்களில் 50% பழைய வாகனங்கள்தான் இருக்கின்றன. எனவேதான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக டெல்லி பாஜக அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் சில டெக்னிக்கல் பிரச்சனையும் இருந்தது.
அதாவது வாகனங்கள் பழையதா? புதியதா? என்று அடையாளம் காணும் சிறப்பு (ANPR) கேமராக்களால் 2019ம் ஆண்டுக்கு பின்னர் ரெஜிஸ்டர் ஆன வாகனங்களை அடையாளம் காண முடியவில்லை. எனவே எரிபொருள் நிரப்ப செல்லும் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிய சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே பெட்ரோல் பங்குகளில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். இத்துடன் சேர்ந்து இந்த ANPR கேமராக்களின் பிரச்சனையும் மக்களை கோபமடைய செய்திருக்கிறது. எனவே இந்த நடைமுறையை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
குருகிராம் பகுதியில் எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. டெல்லி நிறுத்தி வைத்தது போல் குருகிராமும் நிறுத்தி வைக்குமா? அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்!










Click it and Unblock the Notifications