"சாயுதா" அஸ்திவாரம்.. சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு தாவிய DD தூர்தர்ஷன்.. உடனே கிளம்பிய சலசலப்பு
டெல்லி: மத்திய பாஜக அரசு மீது மீண்டும் ஒரு விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.. என்ன காரணம்?
மத்திய பாஜகவில் பெரும்பாலான விஷயங்கள் காவி மயமாகி கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வரும்நிலையில், டிடி-யும் சிவப்பிலிருந்து காவிக்கு மாறியிருப்பது சலசலப்பை கிளப்பி வருகிறது.

உத்தரபிரதேசம்: ஏற்கனவே உத்தரப்பிரதேச அரசு அனைத்தையும் காவி மயமாக்கிக்கொண்டிருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, காசி விஸ்வநாதர் கோயிலில், பக்தர்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள போலீசாருக்கும், காவி டிரஸ் வழங்கப்பட்டிருந்தது கடந்த வாரம் கூடுதல் விமர்சனத்தை உண்டுபண்ணிவிட்டது.
"போலீசாருடன் ஒப்பிடும்போது, கோயில் பூசாரிகளுடன் பக்தர்கள் எளிதாக பழகிவிடுகிறார்கள். அதனால்தான், சன்னதியிலிருக்கும் போலீசாருக்கு காக்கி உடைக்கு பதில், பூசாரியின் பாரம்பரியமான காவி உடை வழங்கப்பட்டுள்ளது" என்று காரணமும் சொல்லப்பட்டது.
சமாஜ்வாதி கட்சி: இதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளின் அதிர்வுகள் இன்னமும் அடங்கவில்லை. ஆனால், அதற்குள் இன்னொரு சலசலப்பு கிளம்பியிருக்கிறது.
DD எனப்படும் தூர்தர்ஷன் இந்தி செய்தி தொலைக்காட்சி, தன்னுடைய லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றியிருக்கிறது. பிரச்சார் பாரதி என்பது அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமாகும்.. அப்படியிருக்கும்போது, DD NEWS" லோகோவின் நிறம் சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.. பிராண்டிங், டிசைன், லோகோ உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்துள்ளதாக DD news அறிவித்திருந்தது.
எதிர்க்கட்சியினர்: இதற்கும் எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். குறிப்பாக, கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜவஹர் சிர்கார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. இவர் தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்..
'மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்தால், அங்கேயும் மெரூன் மற்றும் சிவப்பு நிறத்துக்கு பதிலாக காவி நிறம்தான் மாற்றப்பட்டுள்ளது.. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களின் யூனிபார்ம் சாம்பல் மற்றும் நீல நிறத்தில் இருந்தது. இப்போது, இதில் பாதி ஊழியர்கள் காவி நிற யூனிபார்முக்கு மாறியிருக்கிறார்கள்..
காவி கலர்: ஜி-20 லோகோவிலும் காவி கலர்தான் காணப்படுகிறது. இந்த காவி என்பது கட்சி மற்றும் அரசின் அடையாளம் ஒன்றாக இணைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும்... அந்தவகையில், இது சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஆனால், இத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், "இது காவி நிறம் கிடையாது, இது ஆரஞ்சு நிறம்" என்று பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் திவேதி விளக்கம் தந்தபடி உள்ளாராம்












Click it and Unblock the Notifications