டிஜிட்டல் வளர்ச்சியில் கேம் சேஞ்சராக உருவெடுக்கும் இந்தியா.. பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு
டெல்லி: டிஜிட்டல் வளர்ச்சியில் இந்தியா கேம் சேஞ்சராக உருவெடுக்க உள்ளது. இதற்கான முக்கிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் டேட்டா சென்டர்களை அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கப்படும் என்றும், இந்த சலுகை 2047 ஆம் ஆண்டு வரை வரி நீட்டிக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அறிவிப்பு என்ன?
வரி சலுகைககள் வழங்கப்படுவதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் டேட்டா சென்டர்களை இந்தியாவில் அமைக்க முன்வரும். இப்படி இந்தியாவில் அதிக அளவில் டேட்டா சென்டர்கள் அமைக்கப்படுவதன் மூலம், இந்தியர்களின் டேட்டா இந்தியாவுக்கு உள்ளேயே சேமிக்கப்படுவதை உறுதி செய்யப்படும்.
டேட்டா சென்டர்கள் ஏன் முக்கியம்?
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சர்வர்களை இந்தியாவில் அமைப்பதன் மூலம், டேட்டா லீக்கேஜ் அபாயம் குறைகிறது. குறிப்பாக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை பின்பற்றுவது, இந்த அறிவிப்பின் மூலம் எளிதாக்கப்படுகிறது. அதேபோல டேட்டா சென்டர்கள் நமக்கு அருகிலேயே இருக்கும்போது, தகவல் பரிமாற்றப்படும் வேகம் அதிகரிக்கும். 5G, ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி தளங்களின் தரவு மேம்படும். இது தவிர நிதிப் பரிவர்த்தனைகள் இன்னும் கூடுதல் வேகத்துடன், பாதுகாப்புடன் நடைபெறும்.
1 ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம்
இந்தியா 1 ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற, டேட்டா சென்டர்கள் மிக அவசியமாகும். வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில்.. AI மாடல்களை பெற்று வைக்க அதிகப்படியான கம்ப்யூட்டிங் பவர் தேவை. வரி சலுகை மூலம் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் தங்களின் AI கிளவுட் மையங்களை இந்தியாவில் அமைக்கும். இதன் மூலம், சிறுகுறி தொழில்கள் குறைந்து செலவில் க்ளவுட் சேவைகளை பயன்படுத்த வழிவகுக்கும்.
டேட்டா சென்டர்கள்
டேட்டா சென்டர் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, அது மிகப்பெரிய தொழில்நுட்ப உட்கட்டமைப்பு. வரும் 2035க்குள் இந்த துறையில் சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ஐடி வல்லுநர்கள் முதல் பராமரிப்பு பொறியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான உயர் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளும் இதனால் உருவாகும். எனவே டேட்டா சென்டர்கள் அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு வரி சலுகையை கொடுப்பது என்பது, லாபகரமான விஷயம்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications