இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா? 33% மகளிர் இடஒதுக்கீட்டில் “இக்” வைத்த மத்திய அரசு! கனிமொழி நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மக்களவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்யும் நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கடந்த திங்கள் கிழமை 5 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் கேபினட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 27 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்புக் கூட்டத் தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிகழ்வுகளை முடித்துவிட்டு மதியம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அங்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.
அப்போது புதிய நாடாளுமன்றத்தில் முதல் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திங்கட்கிழமை கேபினட் ஒப்புதல் அளித்து. இதற்கு அனைத்து கட்சி எம்பிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியின்போது பல முறை இந்த மசோதா கொண்டு வரப்பட்டும், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் அது நிறைவேறவில்லை.
பல ஆண்டுகளாக இந்த மசோதாவை சுற்றி எண்ணற்ற விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்தன. நாடாளுமன்றத்தை இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் முந்தைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. 1996 ஆம் ஆண்டு இது தொடர்பாக முதல் முறையாக மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மகளிர் உரிமையை நிறைவேற்றவும், அவர்களின் சக்தியை பல்வேறு நற்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார். " என்று கூறினார்.
இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, "முக்கியமான இந்த மசோதாவை தாக்கல் செய்த அரசின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்து உள்ளன. மசோதாவை கொண்டுவருகிறோம் என்று கூறிவிட்டு, தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என சொல்வது கண்துடைப்பு.
இந்த தேர்தலுக்காக இந்த மசோதாவை கொண்டு வந்ததாக தெரியவில்லை. ஆனால் தேர்தலுக்கான அறிவிப்பு என்றே கருதப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தோம். இவ்வளவு பெரிய விஷயத்தை பெண்களுக்காக நாங்கள் செய்துள்ளோம் என வாக்கு வங்கிக்காக அவர்கள் இதை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது." என்றார்.
இந்த நிலையில் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், "மகளிர் இடஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் விதமாக மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை வரை காத்திருக்கக்கூடாது." என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications