அவமரியாதை.. தர்மேந்திர பிரதானுக்கு வைத்த செக்.. உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார் கனிமொழி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களையும் தமிழக மக்களையும் அவமதித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகரிடம் திமுக எம்பி கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.

Kanimozhi Dharmendra Pradhan dmk

இதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. குறிப்பாக திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு இல்லை எனவும், விருப்பப்பட்ட பிற மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என பாஜக கூறி வருகிறது. மேலும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படும், நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் இந்தி படிப்பதை திட்டமிட்டு திமுக தடுப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாம் கட்ட அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது திமுக எம்பிகள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசினர். குறிப்பாக கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்காது என பேசினார். தொடர்ந்து அதற்கு பதில் அளித்து பேசிய தர்மேந்திர பிரதான்,"தேசிய கல்விக்கொள்கை திட்டத்தில் தமிழகம் கையெழுத்து போட வந்தபோது சூப்பர் முதல்வர் அதை தடுத்துவிட்டார். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அம்மாநில அரசு வஞ்சிக்கிறது. திமுகவினர் அநாகரீகமானவர்கள். அவர்கள் ஜனநாயகம் இல்லாதவர்கள். அம்மாநில மாணவர்களின் நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். அம்மாநில மக்களுக்கும் அவர்கள் நியாயமானவர்களாக இல்லை" என்றார்.

Kanimozhi Dharmendra Pradhan dmk

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை மன்னர் போல எண்ணிக் கொண்டு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்துடன் பேசுவதாகவும், அவருக்கு நாவடக்கம் வேண்டும் என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து தனது கருத்தை திரும்பப்பெற்ற தர்மேந்திர பிரதான்," என்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதனை தான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என பேசி இருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களையும் தமிழக மக்களையும் அவமதித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகரிடம் திமுக எம்பி கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

அதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் உட்பட திமுக எம்பிக்கள் குறித்து அவதூறாகவும் மரியாதை குறைவாகவும் பேசியதாகவும், மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறித்தும் திமுக எம்பிக்கள் குறித்தும் அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+