பால், தயிரை விடுங்க.. கோமியத்திற்கு 50% கூட ஜிஎஸ்டி ஏத்திக்கோங்க.. மக்களவையில் திமுக எம்பி தாக்கு
டெல்லி: பால், தயிர் மீதான ஜிஎஸ்டி விலை உயர்வை விட்டுவிட்டு கோமியத்தின் மீது 50 சதவீதம் கூட ஜிஎஸ்டியை ஏற்றிக் கொள்ளுங்கள் என மக்களவையில் திமுக எம்பி செந்தில் குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பால், உருளைக்கிழங்கு, தயிர், கோதுமை மாவு, அரிசி உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி விலை உயர்வை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன.

திமுக எம்பி செந்தில் குமார்
திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் மக்களவையில் பேசிய வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாஜக அரசு கார்பரேட் அரசுகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. பால், தயிர், உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலையை நீங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

சாமானியர்கள்
இப்படி இருந்தால் சாமானியர்களால் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும் என எதிர்பார்க்கிறீர்கள். சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படும் பால் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பொருளுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தினால் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.

மாட்டு கோமியம்
அந்த பொருள் மாட்டு கோமியம். அவற்றிற்கு உச்சபட்ச ஜிஎஸ்டி வரியை விதித்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு ஏன் சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும்? எப்போது தேர்தல் வந்தாலும் நாம் எதை பார்க்கிறோம். எரிப்பொருட்களின் விலைகள்!

சமையல் எரிவாயு சிலிண்டர்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து காணப்படும். இவர்கள் தேர்தலில் வென்றவுடன் விலையை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கிறார்கள். இத்தகைய நடைமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். இதனால்தான் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திராவிட மாடல்- தாழ்த்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலை சார்ந்து அமையும். அதே போல் நரேந்திர மோடியின் அரசாங்கம் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமைவதை பார்க்கிறோம். நன்றி. இவ்வாறு மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் பேசியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications