தமிழச்சி தங்கபாண்டியனின் “பறிபோன ஐபோன்”.. டெல்லி அறிவாலய திறப்பு விழாவில் மாயமான செல்போன்.. விசாரணை!
டெல்லி : டெல்லி திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் விலை உயர்ந்த செல்போன் பறிபோன குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்பிக்களுக்கு மேல் உள்ள கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன் படி 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது.

டெல்லி திமுக அலுவலகம்
இங்கு திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின. மொத்தம் 8 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் இநத அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது மார்பளவு சிலைகள் உள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
இன்றைய தினம் மாலை 5 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
குறிப்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணி தலைவர் உதயநிதி, மகளிரணி செயலாளர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டார்.

செல்போன் மாயம்
இந்நிலையில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் பறிபோய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் யாரும் அவரது கைப்பையில் வைத்திருந்த விலை உயர்ந்த ஐபோனை எடுத்துச் சென்றார்களா அல்லது வேறு எங்கும் மாயமானதா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் செல்போன் மாயமானதாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications