டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபாவில் ஸ்மிருதி இரானி ஆவேசம்.. மிரட்டும் தொனியில் முழக்கமிட்ட காங். எம்.பிக்களுக்கு பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபாவில் ஸ்மிருதி இரானி ஆவேசம்.. காங். எம்.பிக்களுக்கு பதிலடி

    டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவங்களை அரசியல் ஆயுதமாக்குகின்றன எதிர்க்கட்சிகள் என லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாக பேசினார்.

    லோக்சபாவில் இன்று பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராமருக்கு கோவில் கட்டுகிறோம்.. இன்னொரு பக்கம் சீதைகள் எரிக்கப்படுகின்றனர் என கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி பதிலளித்து பேசியதாவது:

    ஸ்மிருதி இரானி கேள்வி

    ஸ்மிருதி இரானி கேள்வி

    ஹைதராபாத்திலும் உன்னாவிலும் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி மேற்கு வங்க எம்.பி. (ஆதிர் ரஞ்சன் சவுத்ரி) பேசினார். அதே மேற்கு வங்கத்தில் மால்டாவில் நடந்த பலாத்கார சம்பவம் அவருக்கு தெரியவில்லையா?

    பலாத்கார சம்பவங்கள்

    பலாத்கார சம்பவங்கள்

    பலாத்கார சம்பவங்களை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகின்றன. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது பலாத்கார சம்பவத்தை அரசியல் ஆயுதமாக்கினார்கள் என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    ஸ்மிருதி இரானி ஆவேசம்

    ஸ்மிருதி இரானி ஆவேசம்

    அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ஸ்மிருதி இரானியை நோக்கி முழக்கமிட்ட படி வந்தனர். இதனால் கடும் கோபமடைந்த ஸ்மிருதி இரானி, தாம் பேசியது உண்மைதான்.. முதலில் உங்க இடத்துல போய் உட்காருங்க.. ஒரு பெண் இங்கே நின்று பேசுவதை நீங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது என ஆவேசப்பட்டார்.

    காங். எம்பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

    காங். எம்பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

    ஆனாலும் காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனை வன்மையாக கண்டித்த மத்திய அமைச்சர் ஜவடேகர், காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். பின்னர் மதிய உணவுக்காக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

    சபை ஒத்திவைப்பு

    சபை ஒத்திவைப்பு

    உணவு இடைவேளைக்குப் பின்னர் சபை கூடிய போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்பிக்கள் தியான் குரியகோசே, பிரதாபன் ஆகியோர் ஸ்மிருதி இரானியை மிரட்டும் வகையில் முழக்கமிட்டனர். அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

    English summary
    Union minister Smriti Irani hitting back at the opposition for politicising and communalising the rape issues in Loksabha debate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X