"திருமணம் என்றால் என்ன?".. முட்டாள்னு திட்டி முட்டை போட்ட ஆசிரியர்! டிரென்ட்டான மாணவனின் கட்டுரை
டெல்லி: திருமணம் என்றால் என்ன என கட்டுரை எழுதுமாறு கூறியது ஒரு குத்தமா? மாணவன் எழுதிய கட்டுரையும் டீச்சர் போட்ட முட்டையும் என அந்த கடிதம் வைரலாகி வருகிறது.
பள்ளிகளில் ஏதாவது ஒரு பொதுவான டாப்பிக்கை கொடுத்து கட்டுரை எழுதுமாறு கூறுவார்கள். இதன் மூலம் நமது பொது அறிவு திறன் சோதிக்கப்படும். மேலும் மாணவர்கள் புத்தகத்தின் உதவியின்றி அவர்களின் எழுத்தாற்றத்தையும் கற்பனை திறனையும் கிரகிக்கும் திறனையும் அதிகரிக்கவும் இது போன்ற கேள்வி எழுப்பப்படுகின்றன.
நூலகம், பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு, வீர விளையாட்டுகள், சுதந்திர போராட்ட வீரர், உங்கள் ஊர் உள்ளிட்டவை கேள்வியாக கேட்கப்படும். இதற்கு 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் நிறைய காமெடி சம்பவங்கள் நடைபெறும்.

மல்லிகைப் பூ
உதாரணமாக மல்லிகைப்பூ குறித்து கட்டுரை எழுத சொன்னால், மல்லிகைப்பூ வெள்ளையாக இருக்கும். இதன் நிறம் வெள்ளை. இந்த வெண்மை நிறம் அழகாக இருக்கும் என எழுதுவர், இதைதாண்டி போகாமல் வெண்மை நிறத்தையே பிடித்துக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் எழுதுவர்.

சோப்புகளின் வகைகள்
அது போல் 80ஸ் கிட்ஸ்களுக்கு நினைவிருக்கும்! What is Soap? What are the types of Soap? என கேட்பார்கள். இது சில நேரங்களில் அவுட் ஆப் சிலபஸ்ஸாக இருக்கும். என்றாலும் கேள்வி கேட்பர். What is soap என்ற கேள்வியை விட்டுவிட்டு types of soaps என்ற கேள்விக்கு ஹமாம், லக்ஸ், லைபாய், சின்தால் என எழுதி வைத்திருப்பர். இதை ஆசிரியர்கள் படித்துவிட்டு சிரிப்பர்.

திருமணம் என்றால் என்ன
அந்த வகையில் தற்போது ஒரு பள்ளியில் திருமணம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு கட்டுரை வரையுமாறு ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மாணவன் எழுதிய கட்டுரையும் அதற்கு அவர் பெற்ற பூஜ்ய மதிப்பெண்களும் வைரலாகி வருகிறது. திருமணம் என்பது ஒரு பெண்ணின் பெற்றோர் இப்போது நீ பெரிய பெண்ணாக ஆகிவிட்டாய். அதனால் உனக்கு எங்களால் சாப்பாடு போட முடியாது.

ஆண் மகன்
உனக்கு உணவு அளிக்கும் சிறந்த ஆண் மகனை கண்டுப்பிடி என கூறுவர். அதற்கு அந்த பெண் ஒரு ஆணை கண்டுபிடிப்பார். அதே போல் ஆணின் பெற்றோரும் அந்த ஆணிடம் நீ பெரிய பையனாக ஆகிவிட்டாய். அதனால் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். இருவரும் தங்களை சோதித்து கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பிறகு ஒன்றாக வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முட்டாள்தனமான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார்கள் என எழுதியுள்ளார்.

மதிப்பெண்கள்
10 மதிப்பெண்களுக்கான இந்த கட்டுரைக்கு முழு மதிப்பெண்களும் கிடைக்கும் என நம்பி எழுதிய மாணவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த மாணவனுக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுத்த ஆசிரியர் "நான்சென்ஸ்" என்றும் அந்த மாணவரை திட்டியுள்ளார். இந்த கட்டுரை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications